districts

img

மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.21- தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை ,எளிய  மக்களை மாற்று இடம் கொடுக்கா மல் குடியிருப்புகளை காலி செய்வ தற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  தேனி ஆட்சியர் அலுவலகம் முன்  பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி நகரில் ரயில்வே புறம்  போக்குகள், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் 60 ஆண்டுகளுக்கு மேலாக 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் குடியி ருந்து வருகிறார்கள். அவர்களை அரசு தரப்பில் 3 முறை குடியிருப்பு களை காலி செய்ய முயன்றனர்.  அப்போது மாற்று இடம் கொடுத்து விட்டு காலி செய்வதாக சொன்ன வர்கள்  எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இந்நிலையில் மேம்பாலம் அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் குடி யிருப்புகளை காலி செய்ய சொல்லி தாக்கீது கொடுத்துள்ளனர். 2 ஆயி ரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்  கும் நிலையில் அரசு கொடுத்த வாக்குறுதியின்படி மாற்று இடம்  வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்  தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர்  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. வெங்கடேசன், சி.முருகன், சி. முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்  பினர்கள் டி.ஜெயபாண்டி தாலு காக்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.