districts

img

சு.வெங்கடேசன் எம்.பி., தலையீட்டில் இருவேறு அனுபவங்கள்: கல்வியை ஊக்குவிக்கும் மாநில அரசும் விண்ணப்பிக்கவே வழிசெய்யாத ஒன்றிய அரசும்

மதுரை,செப்.29-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கல்வி குறித்த இரண்டு பிரச்சனைகளில் தலையிட்டுள்ளார். இதில் மாற்றுத்திற னாளி மாணவிக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்க  புதிய அரசாணையே தமிழ்நாடு அரசால்  பிறப்பிக்கப் பட்டுள்ளது.மற்றொன்றில் பால புரஸ்கார் விருதுக்காக புதிய இணையதளத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒரு குழந்தையை ஒன்றிய அரசு வற்புறுத்தி யுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு:  

இதுவன்றோ செயல் 
இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான மாணவி த.லட்சுமி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி யில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் கால்களால் ஓவியம் வரைந்துள்ளார்.  மூன்று தேர்வுத்தாள்களில் இரண்டில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஒன்றில் மட்டும் மதிப்பெண் குறைவு என்ற காரணத்தால் கல்லூரி சேர்க்கை கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சனையை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றேன். விளிம்புநிலையினருக்கும் மாற்றுத்திறனாளிக ளுக்கும் சட்டவிதிகள் வளைந்து கொடுப்பதுதான் ஜனநாய கத்தின் அழகு. அரசாணைகளுக்கு மனிதத்தன்மையே அடிப்படையாக இருக்க வேண்டும். துறையின் அமைச்சரிடமும் துறையின் செயலாளரிட மும் வலியுறுத்தினேன். எமது கோரிக்கையை ஏற்று மாணவி த. லட்சுமிக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்க புதிய அரசாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவன்றோ செயல். பெருமகிழ்வு. தமிழக முதல்வருக்கும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகளை பதறவிடும் ஒன்றிய அரசு
“பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார்” விரு துக்காக மதுரையை சேர்ந்த ஒரு குழந்தை விண்ணப்பிப் பது சம்பந்தமாக ஒன்றிய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு இரண்டு கடிதங்களை 22.08.2022 & 24.09.2022 ஆகிய தேதிகளில் எழுதி இருந்தேன். முதல் கடிதத்திற்கு பதில் அளித்த அமைச்சர், பழைய இணைய முகவரியில் விண்ணப்பித்தால் மட்டும் போதாது; Awards.nic.in இணைய தளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது; அதில் விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட குழந்தை யை அறிவுறுத்துங்கள்; கடைசி தேதி 30.09.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.  இதை குழந்தையின் பெற்றோருக்கு நான் தெரிவித்து இருந்தேன். அமைச்சரின் கடிதத்திற்கு பின் 20 நாள்கள் கழிந்து விட்டன. இடையில் மீண்டும் ஒரு கடிதத்தை 24.09.2022 அன்று அமைச்சருக்கு எழுதியிருந்தேன். தினமும் குழந்தையின் பெற்றோர் மேற்கண்ட இணைய தளத்தில் விண்ணப்பிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இன்னும் 3 நாட்களில் கடைசி தேதி முடிவடைகிறது. ஆனால் அதற்கான வழி அதில் இன்னும் கிடைக்கவில்லை. மிகுந்த ஆர்வத்தோடு “பால புரஸ்கார்” விருதுக ளுக்காக விண்ணப்பிக்க முனையும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்களை பதற விடலாமா? உளவி யல் சிக்கல்களுக்கு ஆளாக்கலாமா? இவ்வளவு கால தாமதமா? அமைச்சர் அவர்களே விரைவில் இணையத்தில் விண்ணப்பம் செய்ய வழி ஏற்படுத்தி தாருங்கள். விண்ணப்ப கடைசித் தேதியை நீட்டியுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.