மதுரை, ஜூன் 15- தனியார் பள்ளிகளின் கட்ட ணக் கொள்ளையை தடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் தல்லாகுளத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் புதனன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் சந் தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் சட் டத்தின் அடிப்படையில் நிர்ணயிக் கப்பட்ட கட்டணத்திற்கு மேல் தனி யார் பள்ளிகள் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இலவசம் மற்றும் கட் டாய கல்வி உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண் டும். அரசு மற்றும் தனியார் பள்ளி சேர்கையில் நன்கொடை வசூ லிப்பதை தடுக்க வேண்டும் என் றும். தற்போது துவங்கியுள்ள கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கட்ட ணம் மும்முரமாக வசூலிக்கப் பட்டு வருகிறது என்று பெற்றோர் கள் தொடர்ந்து இந்திய மாண வர் சங்கத்திற்கு தகவல் தெரி வித்து வருகிறார்கள். அந்த அடிப் படையில் கல்வி நிலையங்களை வணிக நோக்கத்துடன் செயல் படுத்தி வரும் வேலம்மாள் கல்வி நிலையங்கள், போஸ்கோஸ், மகாத்மா, செயிண்ட் ஜோசப் பள்ளி போன்று மதுரையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வணிக நோக்கத்து டன் பணம் வசூலித்து வருகிறது.
மேலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளி களில் 25 சதவீத இடங்களை மறுக் கப்பட்டவர்கள் மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கியவர்களுக் கான ஒதுக்கீடை முறையாக அமல்படுத்தாமல். அவ்வாறு சேரும் மாணவர்களிடம் கட்டணம் மற்றும் நன்கொடை வசூலித்து வருகிறது. கேவிடி (சுப்பிரமணிய புரம்), டி.வி.எஸ் லட்சுமி, டால்ஃபின், ராஜன், மகாஜன வித்யாலயா இதுபோன்ற பல தனியார் பள்ளிகள் மாணவர்களி டம் ரூ.5000 வரை நன்கொடை யாக கட்டணம் வசூலிக்கின்றன. இத்தகைய பள்ளிகள் குறித்தான விவரங்களை மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரி தெரிவிக்கும் வகையிலும் அப் பள்ளிகளில் இது குறித்தான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி சங்க மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் எஸ். வேல்தேவா, மாவட்டத் தலைவர் க. பாலமுரு கன் ஆகியோர் மனு அளித்த னர்.