districts

img

அரசு ஊழியர் சங்க மூத்த தலைவர் தோழர் குரு.தமிழரசு காலமானார்

மதுரை, ஜன.29- மதுரை நெடுஞ்சாலைத் துறை ஓய்வுபெற்றோர் சங்கத் தின் மாநில பொதுச்செயலாள ரும், தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவரும், தமிழ் நாடு அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளருமான தோழர் குரு.தமிழரசு (73) சனிக் கிழமையன்று காலமானார்.  தோழர் குரு. தமிழரசு 1988 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன் னணி வகித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க இயக்கத்தில் இணைந்தார். பின்னர் வட்டக் கிளை உறுப்பினராகவும், செய லாளராகவும் இருந்து செயல் பட்டு, தோழர் வீராச்சாமியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் பணியாற்றி மாவட்ட துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார்.  நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிய போது அங்குள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்ட மைப்பை உருவாக்கி நெடுஞ்சா லைத்துறை ஊழியர்களின் உரி மைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். 2011ஆம் ஆண்டு தன்னுடைய பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஓய்வுபெற்ற நல அமைப் பின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத் துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளராக இருந்து  2016 ஆம் ஆண்டு மாவட்ட தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து இயக்கப் பணியாற்றி வந்தார். 

உடல் நலக்குறைவு காரண மாக இரண்டு தினங்களுக்கு முன்பு அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தோழர் குரு. தமிழ ரசு சனிக்கிழமை அன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவரது மறைவுச் செய்தி யறிந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், மாவட்டத் தலை வர் ஜெ.மூர்த்தி, செயலாளர் க.நீதிராஜா, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், மாவட்டச் செயலாளர் அ.பால்முருகன், பொருளாளர் ஜெயராமன், நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் மாநிலத் தலைவர் எஸ்.டி.எஸ்.திருவேங்க டம், மாவட்டத் தலைவர் சக்தி வேல், செயலாளர் ஆதரமிளகி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா.நரசிம்மன், ம.பால சுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராதா, வடக்கு - 1 ஆம் பகுதி குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி,தீக்கதிர் மதுரை பதிப்பு பொதுமேலாளர் ஜோ. ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் அவ ருக்கு மாலை அணிவித்து அஞ் சலி செலுத்தினர்.

இறுதி நிகழ்ச்சி தத்தனேரியில் நடைபெற்றது.  பின்னர் அங்கு அஞ்சலி கூட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  பொதுச்செயலாளர் ஆ.செல் வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என்.ஜெயச்சந்தி ரன், மாவட்ட செயலாளர் அ.பால முருகன் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர்.