districts

img

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

புதுதில்லி, டிச.25- உச்சநீதிமன்றம் உட்பட பல  பெரிய வழக்குகள் தோல்வி அடைந்ததால்  கிரிமினல் சதி குற்றச்  சாட்டின் பேரில் இனி வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அமலாக்கத்  துறை இயக்குநர் ராகுல் நவின் அதி காரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கர்நாடக மாநில துணை முதல் வர் டி.கே.சிவகுமார், சத்தீஸ்கர்  மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ்  பாகேல் மற்றும் அவரின் நம்பிக் கைக்கு உரியவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா மற்றும் அவரது மகன் யாஷ் துதே ஜாவுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்த சூழ லில் இந்த புதிய உத்தரவு வந்துள்ளது. பாஜகவுக்கு போட்டியாக உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும்  விமர்சகர்களை சதிக் குற்றச்சாட் டின் கீழ் மட்டுமே சிறையில் அடைக் கும் அமலாக்கத்துறையின் நட வடிக்கை பரவலாக விமர்சிக்கப் பட்டது. சதிக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழும் வழக்குப் பதிவு  செய்ய வேண்டும் என்று அமலாக்  கத்துறை இயக்குநர் இப்போது அறி வுறுத்தியுள்ளதாக தேசிய ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் 2023 இல், சதி (ஐபிசி  120பி) அடிப்படையில் பிஎம்எல்ஏ வை விதிக்க முடியாது என்று உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டது. பிஎம்எல்ஏ  யின் கீழ் 150 வகையான குற்றங்கள்  உள்ளன.

பெரும்பாலான சந்தர்ப் பங்களில், அமலாக்கத்துறை இந்த  வகையில் சேர்க்கப்படாத குற்றங்க ளுக்கு சதி (120B) குற்றப்பிரிவை பயன்படுத்துகிறது. அதைப் பின் பற்றி, பின்னர் பிஎம்எல்ஏயின் பிரிவு  III இன் கீழ் விதிகளைப் பயன்  படுத்துகிறது. இந்த நடவடிக்  கைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு பலத்தஅடியாக அமைந்தது. அத்துடன் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் நீதி மன்றம் நிராகரித்தது. டி.கே.சிவகுமார் மீது 2018 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததாக அமலாக்கத்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சட்டப்பிரிவு 120பியின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் பிஎம்எல்ஏ குற்றம் சாட்ட முடியாது  என்று கூறி உச்ச நீதிமன்றம் இந்த  வழக்கை ரத்து செய்தது. இதே கார ணத்தை கூறி பூபேஷ் பாகல் மீதான  மதுபான ஊழல் வழக்கையும் உச்ச  நீதிமன்றம் ரத்து செய்தது. அமலாக்கத்துறை தொடரும் வழக்குகளில் தண்டனை விகிதம் மிகக் குறைவு என்பதை ஒன்றிய அரசு சமீபத்தில் மக்களவையில் ஒப்புக்கொண்டது. கடந்த ஐந் தாண்டுகளில் பணமோசடி தொடர் பாக 911 வழக்குகள் பதிவு செய் யப்பட்டு 42 வழக்குகளுக்கு மட்  டுமே தண்டனை வழங்கப்பட்டுள் ளது. பாஜகவின் அரசியல் வேட்டை யின் ஒரு பகுதியாக போதிய ஆதா ரங்கள் இல்லாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதே தண்டனை விகிதம் குறைந்ததற்குக் காரணம்.