districts

img

கேசா டி மிர் பள்ளியில் விளையாட்டு விழா

இராஜபாளையம்,மார்ச் 7- இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா நடைபெற்றது.  பள்ளித்தாளாளர் திருப்பதி செல்வன்   தலைமை தாங்கினார்.  மேனேஜிங் டிரஸ்டி அருணா தேவி  முன்னிலை வகித்தார்.  முதல்வர்   திருமலைராஜன் வரவேற்றார். இராஜபாளையம் தாசில்தார்  இராமசுப்பிரமணியன்,  விளையாட்டு   போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி  கேடயம் மற்றும் சான்றிதழ்களை  வழங்கினார். விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆண்டறிக்கையினை உடற்கல்வி ஆசிரியர் பரதன் வாசித்தார்.