திண்டுக்கல், அக்.7- குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூ.7.850 வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க முதல் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் சத்து ணவு அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்க மாவட்ட மாநாடு திங்களன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மணிக்காளை தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.அய் யங்காளை, பொதுச் செய லாளர் ராமமூர்த்தி, மாவட் டத் தலைவர் எஸ்.எம்.ஜெய சீலன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அரசு ஊழியர் சங்க தலைவர்கள் முபாரக் அலி, சுகந்தி, தோழ மைச்சங்க நிர்வாகிகள் டி. ராஜமாணிக்கம், பத்மா, ஜெசி, எம்.எல்.கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசி னர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மாவட்டத் தலைவராக டி.பழனிச்சாமி, செயலாள ராக வி.மணிக்காளை, பொரு ளாளராக பி.சாரதா மற்றும் நிர்வாகிகளாக இளங்கோ, சின்னம்மாள், சித்திரக்கலை, துரைராஜ், சுப்புராம், அரு ணாதேவி மற்றும் தணிக்கை யாளர்களாக ஜே.எஸ்.விஜ யகுமார் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மேலும் ஓய்வூதியத் தோடு, அகவிலைப்படி, இல வச மருத்துவக் காப்பீடு, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதி யம் உள்ளிட்ட கோரிக்கை கள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டன.