தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலை யம், தென் தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயி களுக்கு ஒரு வரப்பிரசாத மாக விளங்குகிறது. இங்கு தென்னை சாகு படியை அதிகரிக்க பல்வேறு கட்ட ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று கொண்டிருக் கின்றன. 15 ஆவது உலக தென்னை தினத்தை அண் மையில் கொண்டாடிய வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மூலம், சென்ற வருடத்தில் மட்டும் 7,915 விவசாயிகள் நேரடி யாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்றுள்ளனர். மேலும், 34 பயிற்சி பட்டறை மற்றும் 21 வயல்வெளி பார்வையிடல் மூலமாக சுமார் 3,224 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். ஆராய்ச்சியில் மேலும் ஒரு வெற்றிப் படியாக இளஞ் சிவப்பு நிறம் கொண்ட மட்டைகளை உடைய தென்னை ரகங்களை கண்டு பிடித்து, அதற்கு தாவர மர பணு வளங்களின் தேசிய பணியகம் மூலம் பதிவு எண்ணையும் பெற்றுள்ளது. தொடர்ந்து, சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டு ரைகளை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி புதிய வகை சோப்புகளை தயாரித்து உள்ளது. VPM 6 என்னும் புதிய தென்னை ரகத்தை 2024 இல் இந்த ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள் ளது. இந்த ரகம் கடலோர மாவட்டங்களுக்கு ஏற்றது. சராசரியாக ஒரு வருடத் திற்கு 108 தேங்காய்கள் வரை அறுவடை செய்யலாம். இந்த வெற்றிப் பயணத் தில் மேலும் ஒரு மைல் கல்லாக, 16 வருடங்களுக் குப் பிறகு, தேசிய அளவி லான அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு மத்தின் (பனை) கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி நிலை யங்களில் 2023-24 ஆம் ஆண்டிற்கான “சிறந்த ஆராய்ச்சி நிலையம்” எனும் விருது, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வருடாந்திரக் குழு கூட்டத்தில் வழங்கப் பட்டது. இதுகுறித்து, தகவ லறிந்த பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கா. அண்ணா துரை, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலை யத்திற்கும், அதன் விஞ்ஞா னிகளுக்கும் தனது வாழ்த்து களை தெரிவித்துள்ளார்.