ஒன்றிய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலை செய்யும் ஒன்றிய அரசுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.