districts

img

மேலூர்: விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மதுரை செப் 09-  மேலூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த தர்நேஷ் (9) என்ற சிறுவன் விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்திருந்த விநாயகர் சிலையை, சைக்கிளில் வைத்து அப்பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் கரைக்க சென்றுள்ளார்.

அப்போது, சிறுவன் தர்நேஷ் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.