இராமநாதபுரம், மார்ச்.7- மின்சார வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக இராம நாதபுரம் மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்டச் செயலா ளர் காசிநாதன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் குருவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி, திட்டச் செயலாளர் முருகன், பொருளாளர் ஆரோக்கியம், முருகேசன் கோரிக்கைக ளை விளக்கி பேசினர்.