districts

img

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் மறியல்

சின்னாளப்பட்டி,மார்ச் 7- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊரா ட்சியில் மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாள் வேலை வழங்காததை கண்டித்தும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கியதாக பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டி த்தும், மாற்றுத்திறனாளி களை மிரட்டும் தொணியில் தொடர்ச்சியாக பேசி வரும் ஊராட்சி செயலர் மற்றும் பணித்தள பொறுப்பாளர் சத்யா  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று வத்த லக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மறியல் நடைபெற்றது. நிலக்கோட்டை தாலுகா செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெய ந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்பட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் பங்கேற்றனர். போராட் டத்தில் பங்கேற்ற அனை வரும் கைது செய்யப் பட்டனர்.