சென்னை,ஜூலை 14- பழனியில் வியாழனன்று பழனி முருகன் கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக ஜூலை 14 வெள்ளியன்று பழனியில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு பழனி முன்னாள் நகர்மன்றத் தலைவரும் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப் பினருமான வி.இராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பழனி ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ் வரவேற் றுப் பேசினார். கட்சியின் மாநிலச் ்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு ரையாற்றினார். முத்துவிஜயன் (காங்கிரஸ்), பி.ஜெயராமன் (மதிமுக), சிபிஐ நகரச் செயலாளர் கௌசல்யா, விசிக நகரச் செயலாளர் ச.மணவாளன், , திராவிடர் கழகம் நகரத்தலைவர் சி.ராதா கிருஷ்ணன், தமுமுக நகரத்தலைவர் ஜே.முகமது ரபீக், சிபிஎம் நகரச்செய லாளர் கே.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கமலக்கண்ணன், எம்.இராமசாமி, ஆகியோர் பேசினர். தொப் பம்பட்டி ஒன்றியச்செயலாளர் கனகு நன்றி கூறினார். (நநி)