தேனி ,செப்.13- பணி நிரந்தரம் கோரி க.விலக்கில் உள்ள தேனி அண்ணா கூட்டுறவு நூற் பாலை முன்பாக சிஐடியு நிர் வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர் . தேனி அருகே க.விலக் கில் அரசு அண்ணா கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இவ்வாலைக்கு தேனி மாவட்டத்தின் பல் வேறு பகுதியில் இருந்து சுமார் 332 பேர் காலை, மாலை இரவு என சுழற்சி முறையில் பணிபுரிந்து வரு கின்றனர்.இதில் 69 பேர் நிரந்தர பணியாளராகவும், 123 ஆண்கள், பெண்கள் என 208 பேர் தற்காலிக பணியா ளர் உள்ளனர்.இவ்வாலை யில் பருத்தி பஞ்சை நூலாக்கி அரசுக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் 480 நாட்கள் பணி செய்த 208 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய திண்டுக்கல் தொழிலாளர் நல ஆணையாளர் உத்தர விட்டும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை .தற்கா லிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிகளை ஒப்பந்ததாரர்க ளுக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி சிஐடியு கிளைச் செயலாளர் சரவ ணன் தலைமையில் நிர்வாகி கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.