ராஜபாளையம் மார்ச் 7 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு கிளைச்செயலாளர் ஹரிஹரன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.