districts

ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு மக்களின் நலன் கருதி மதுரை மாநகராட்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

மதுரை, ஜூன் 1- மாவட்ட ஆட்சியர் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள்  நலன் கருதி மதுரை மாநகராட்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்டக்குழு தெரிவித்துள்ளது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த  ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதாளசாக்கடை பிரிவு, பம்பிங் ஸ்டேஷன், பார்க் மஸ்தூர் உள்ளிட்ட பிரிவு தொழிலாளர்கள் கடந்த 2 நாட்க ளாக வேலைநிறுத்தப் போராட்டத்  தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் திற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு தொழிற்சங்கங்கள், மாமன்ற உறுப்பி னர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பணியாளர் பிரச்சனைகளை தீர்க்க சிறப்புக் குழு
இந்நிலையில் மதுரை மாவட்ட  ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை யில் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்  பட்டது. மதுரை மாநகராட்சியில் தற்  காலிகமாக பணிபுரியும் பணியா ளர்களை நிரந்தரப்படுத்த தொழிற் சங்க பிரதிநிதிகள் மாநகராட்சி ஆணையருடன் 2 வாரத்துக்குள் உள்  ளாட்சித்துறை அமைச்சரை சந்திக்க  முடிவு செய்யப்பட்டது. கிராம பஞ்சா யத்துளில் பணிபுரியும் பணியாளர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்கு வது தொடர்பாக விரைவில் அறிவிப்பு  வழங்கப்படவுள்ளது, மாநகராட்சி பணியாளர்களுக்கு நடப்பு ஆண்டு  இறுதிக்குள் படிப்படியாக கொரோனா ஊக்கத்தொகை வழங்கப்படும். 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்து ரைகள்படி விடுபட்ட பணியாளர் களுக்கு பணப் பலன்கள் வழங்கப் படும். மாநகராட்சியில் 2 ஒப்பந்த நிறு வனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கு வது நிறுத்தப்பட்டது. தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய பணி யாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் குறைந்தபட்ச ஊதியத்தை ஓரிரு  மாதங்களில் நிர்ணயம் செய்யவுள் ளது. பணியாளர் பிரச்சனைகளை பேசி தீர்க்க மாநகராட்சியில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது, இக்குழு 2 மாதத்திற்கு ஒரு முறை கூடும் என்று மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வ மாக உறுதி அளித்தது.

கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு
இதனையடுத்து செய்தியாளர் களை சந்தித்த போராட்டக் குழு  ஒருங்கிணைப்பாளர் எம்.பாலசுப்பிர மணியன் கூறுகையில் “மதுரை மாநக ராட்சியில் பணிபுரியும் 8 ஆயிரம் தூய்  மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்  னிலையில் நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தது. மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்  கப்பட்டது, புதன் கிழமை முதல் பணி யாளர்கள் பணிக்கு செல்வார்கள், ஒவ்வொரு கோரிக்கையையும் நிறை வேற்ற ஒவ்வொரு காலக்கெடு நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது, போராட்டத்  திற்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சி கள், அமைப்புகள் ஆகியோருக்கு நன்றிகள்” என்று தெரிவித்தார். மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 5 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட தால் 2 வேலை நிறுத்தப் போராட்டத்  திற்கு பிறகு புதனன்று பணிக்கு திரும்பினார்கள். மாநகர் முழுவதும் தூய்மைப் பணிகள் தீவிரமடைந் துள்ளன. குப்பைகளை அகற்றும் பணி பிற்பகல் வரை நடைபெறும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.