districts

img

5 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கும் ஒன்றிய அரசின் நிறுவன கிளை மதுரையில் திறப்பு

மதுரை, செப். 6-  பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திரா சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான உபகர ணங்கள் வழங்கும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் (அலிம்கோ)  நிறுவனத்தின் புதிய  அலு வலக கிளை திறப்பு விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகர ணங்கள் வழங்கும் விழா வெள்ளி யன்று மதுரையில் நடைபெற்றது

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு அருகில் உள்ள ஒன்றிய அர சின் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு ஒருகிணைந்த பிராந்திய மையத்தில் (சி.ஆர்.சி)  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு அலிம்கோ நிறு வனத்தின் மதுரை  கிளையின் அலு வலகத்தை  திறந்து வைத்தார்.மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உப கரணங்கள் பேட்டரி மோட்டார் சைக்கிள், வீல் சேர், செவித் திறன் கருவி, ஊன்று கோல் என ரூ.4 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை 20 மாற்றுத்திறனாளிகளுக்கு   வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.  

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநக ராட்சி துணை மேயர் தி.நாகராஜன், அலிம்கோ நிறுவன மேலாளர் அசோக்குமார்பால்,  அபிஷேக், சிஆர்சி  இயக்குநர் ஜெயலி ப்ளோரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அவனியாபுரம் தாலுகாச் செயலாளர் ஏ.தனபாலன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிக உபகரணங்களை கொடுத்த மாவட்டமாக மதுரை

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் கூறுகையில், ஒன்றிய அரசினுடைய செயற்கை உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான அலிம்கோ நிறுவனத்தின் மதுரை கிளையை துவக்கி வைத்துள்ளேன். ஐந்து ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் அலிம்கோ நிறுவனத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கு கிடைத்த வெற்றி  ஆகும். 

இந்தியாவில் மிக அதிகமாக மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் கொடுத்த மாவட்டமாக மதுரை மாவட்டத்தை மாற்றினோம். 

இன்றைக்கு அதற்கு கிடைத்திருக்கிற இன்னொரு நல்ல பலன்  அலிம்கோ நிறுவனத்தின் நேரடி கிளை அலுவலகமே  மதுரையிலே துவங்கப்பட்டிருக்கிறது. 

இன்றைக்கு  20-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு வாகனங்கள் கொடுத்திருக்கிறோம். சென்னை அசோக் நகரில் அரசு பள்ளியில் பாவ புண்ணியத்தை வலியுறுத்தி ஒருவர் பேசிய போது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் பார்வையற்ற மாற்றத்திறனாளி ஆசிரியர் சங்கர். இந்த விழாவில் ஆசிரியர் சங்கருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு  20-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு வாகனங்கள் கொடுத்திருக்கிறோம். சென்னை அசோக் நகரில் அரசு பள்ளியில் பாவ புண்ணியத்தை வலியுறுத்தி ஒருவர் பேசிய போது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் பார்வையற்ற மாற்றத்திறனாளி ஆசிரியர் சங்கர். இந்த விழாவில் ஆசிரியர் சங்கருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மதுரை ரயில் நிலையத்தில் மீன் சின்னம் அமைக்க வேண்டும் என அந்த வழக்கை தொடுத்தவரும் ரயில்வே நிர்வாகமும் இணைந்து பேசுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் ரயில்நிலையத்தில் மீன் சின்னம் பொறிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.  கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சரை சந்தித்து மதுரையின் சர்வதேச விமான நிலையம் குறித்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் விரிவாக பேசினோம். விரைவில் முடிவு எடுத்து நல்லது நடக்கும் என்று நானும் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.