districts

திருச்சி முக்கிய செய்திகள்

ரத்த தான முகாம்

பாபநாசம், செப்.15 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  ரெகுநாதபுரம் அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந் தது. இதில் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் ரத்த வங்கி மருத்துவக் குழுவி னர் 25 மாணவர்களிடம் ரத்தத்தை சேகரித்தனர். இதில் வட்டார மருத்துவ  அலுவலர் தீபக், மருத்து வர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், ஆய் வாளர்கள் செல்லப்பா பங்கேற்றனர்.

மூதாட்டியிடம் நகை கொள்ளை: 2 பேர் கைது

தஞ்சாவூர், செப்.15 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பெருமகளூர் பகுதி யைச் சேர்ந்தவர் சரோஜா  (70) வீட்டில் தனியாக இருந்தார். இவரது மகன்கள் வெளியூரில் வேலை செய்து வரு கின்றனர். இவர் தனது வீட்டில் இருந்த போது, கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள் மூதாட்டியை கட்டிப் போட்டு, அவரிடம் இருந்து சுமார் 40 கிராம் எடையுள்ள செயின், தோடு, மோதிரம் ஆகிய வற்றை பறித்துச் சென்ற னர்.  இதுகுறித்து மூதாட்டி  பேராவூரணி காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். இந்நிலை யில், பேராவூரணி காவல்  ஆய்வாளர் பசுபதி தலை மையிலான தனிப்படை யினர் தீவிர விசாரணை நடத்தினர்.  இந்நிலையில், காவல் துறையினர் சம்பவ இடத் தில் இருந்த சிசிடிவி பதிவு கள் மற்றும் செல்போன் டவர் உரையாடல் அடிப் படையில், புதுக் கோட்டை மாவட்டம், அறந் தாங்கி தாலுகா, நாகுடி பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற அறிவழகன் (22), திருப்பதி (20) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் தாங்கள் மூதாட்டியிடம் திருடியதை ஒப்புக் கொண்டனர்.  அஜித் என்ற அறி வழகன் ஏற்கனவே மூதாட்டி சரோஜா வீட்டில்  கட்டுமானப் பணியில் பணியாற்றி உள்ளார். அப்போது மூதாட்டி மட்டும் வீட்டில் தனி யாக இருப்பதை நோட்ட மிட்டு, இந்த கொள்ளை யில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள் ளையடிக்கப்பட்ட நகை களை காவல்துறையினர் மீட்ட நிலையில், சனிக் கிழமை இருவரையும் பேராவூரணி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொறியாளர் தின விழா

தஞ்சாவூர், செப்.15 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கட்டு மானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், பொறி யாளர் தின விழா கொண் டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, பேரா வூரணி கட்டுமானப் பொறி யாளர் சங்க தலைவர் எம். திருப்பதி தலைமை வகித் தார். செயலாளர் எம். சந்திர மோகன் வரவேற் றார். பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் பொறியா ளர் தினக் கொடியேற்றி வைத்து, ஓய்வு பெற்ற  அரசுப் பொறியாளர் களை கௌரவித்து வாழ்த்திப் பேசினார்.  மண்டலத் தலைவர் சி.துரையரசன், மண்டலச்  செயலாளர் என்.சர வணன் ஆகியோர் பொது மக்களுக்கு மரக்கன்று களை வழங்கினர்.

ரேசன் கடைக்கு ஒதுக்கிய இடத்தை ஆக்கிரமித்த தனிநபர்கள்: சிபிஎம் கண்டனம்

தஞ்சாவூர், செப்.15 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மேல மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில், அப்பகு தியில் ரேசன் கடை அமைப்பதற்கு ஒதுக்கப் பட்டுள்ள இடத்தை, தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.  அந்த இடத்தை மீட்டு ரேசன் கடைக்கு கட்டடம் கட்டித் தர வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி அருகே உள்ள மேல மணக்காடு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, அரசுக்கு சொந்த மான புறம்போக்கு நிலம் சுமார் 50 செண்டு  உள்ளது. கடந்த செப்.13 ஆம் தேதி இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வெளியூர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும், அந்த இடத்தில் பெரிய அளவில் தகர செட் போட்டு, இரும்பு கதவும் அமைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காவல்துறை யினர், வருவாய்த் துறையினருக்கு தகவல்  அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வரு வாய்த் துறையினர், காவல்துறையினர் வந்து  பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.  இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.  செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் வீ.கருப் பையா, கிளைச் செயலாளர் பாலச்சந்தர் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி அரசு இடத்தை கைப்பற்ற வேண்டும். அந்த இடத்தில் ரேசன் கடை, பள்ளி விளையாட்டு மைதா னம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டி, நேரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும்  போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.

கும்பல் பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

தஞ்சாவூர், செப்.15 - தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில், கடந்த ஆக. 12 அன்று அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் மற்றும் இரண்டு சிறுவர்கள்,  இளம்பெண் ஒருவரை கும்பல் பாலியல் வன்கொ டுமை செய்தனர். இது தொடர்பாக, ஒரத்த நாடு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுவர்கள் இருவரையும் தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்திலும், கவிதாசன், திவாகர், பிர வீன், வேல்முருகன் ஆகிய நான்கு பேரை சிறையிலும் அடைத்தனர். இதில், வேல்முருகன் தவிர மற்ற மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்பல்  பாலியல் வன்கொடுமை யால் பாதிக்கப்பட்ட இளம்  பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய்  நிவாரணம் வழங்கி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றம்: வழக்குகளுக்கு தீர்வு

பெரம்பலூர்/தஞ்சாவூர், செப்.15 - பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொ) இந்திராணி தலைமை வகித்து தேசிய மக்கள் நீதி மன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் சார்பு நீதிமன்ற நீதிபதிகள் அண்ணாமலை, ராதா கிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதி மன்ற நீதிபதி (பொ) கவிதா, மாவட்ட உரிமை யியல் நீதிமன்ற நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம்  மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழு வினர் வழக்கினை விசாரணை செய்தனர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள வருவாய்த்துறை, மோட்டார் வாகன விபத்து, வங்கி வாராக்கடன் ஆகிய  வழக்குகள் உட்பட சுமார் 1,500-க்கும்  மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப் பட்டு அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடி கள் வரவழைத்து, இரு தரப்பு வக்கீல்கள் முன்னிலையில் பேசி வழக்குகள் முடிவுற்றன. மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் வழக்குகள் உட்பட 577 வழக்குகளுக்கு  சமரச தீர்வு காணப்பட்டு அதற்கான இழப் பீட்டுத் தொகை 4,23,68,000 ரூபாய்க்கான உத்தரவை முதன்மை மாவட்ட நீதிபதி இந்தி ராணி வழங்கினார்.  தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை  நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்கு களை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற் காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதி மன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி யும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே.பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி  ஆர்.சத்யதாரா, முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ்.சுசீலா, வழக்குரை ஞர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட  முதலாவது அமர்வில் குடும்ப நல வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.ஆர்.சுப்ரஜா, மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்  எம்.நாகப்பன், வழக்குரைஞர் கே.செந்தில் குமார் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. முதன்மை சார்பு நீதிபதி எம். முருகன், கூடு தல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வீ.கீதா, வழக்குரைஞர் ஆர்.பழநி ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமர்வு களிலும் விசாரணை நடத்தப்பட்டது.  இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம்  11,509 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,302 வழக்குகளுக்கு தீர்வு  காணப்பட்டு, ரூ.17 கோடியே 75 லட்சத்து 91  ஆயிரத்து 981 அளவுக்கு தீர்வு தொகை யாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: செப்.20 கரூரில் நடக்கிறது

கரூர், செப்.15 - தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது  என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித் துள்ளார். கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்  இணைந்து ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துகின்றன. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் 20.9.2024 (வெள்ளி) அன்று வெண்ணைமலையில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில்  காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப் படவுள்ளது.  இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என  அனைவரும் கலந்து கொள்ளலாம். கரூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளை ஞர்கள் தங்களுடைய சுய விவர குறிப்பு, உரிய கல்விச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள லாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள்  www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில்  பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங் களுக்கு 9499055912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இணையவழியில் பெண்ணிடம்  ரூ.27.75 லட்சம் மோசடி

தஞ்சாவூர், செப்.15 - பெண்ணிடம் இணைய வழியில் ரூ. 27.75 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி  வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கைப்பேசிக்கு டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகளில் ஆகஸ்ட் மாதம் ஒரு தகவல் வந்தது. அத்தகவலில் உணவகங்களை மதிப்பீடு செய்து இணையத்தில் வெளியிடுவது போன்ற  டாஸ்க்குகளை நிறைவேற்றினால் நிறைய வருமானம் கிடைக்கும் என்றும், இதற்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு, டாஸ்க்குகளை நிறைவேற்றலாம் எனவும்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அப்பெண் கைப்பேசியில் எதிர் முனை யில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.27.75 லட்சம் செலுத்தினார். அதன் பின்னர் எதிர் முனையில் பேசிய நபர் எந்தவித  லாபத் தொகையையும் கொடுக்காததுடன், நாளடை வில் அழைப்புகளையும் துண்டித்து விட்டார். இதனால், ஏமாற்றமடைந்த அப்பெண் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன்பேரில் காவல் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப்.15 - பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் கே. விஜய லட்சுமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே. மேனகா, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். அகஸ்டின்  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதேபோல, ஆலத்தூரில் வட்டத் தலைவர் ஏ.மல்லிகா  தலைமையிலும், வேப்பந்தட்டையில் வட்டாரச் செயலாளர் ஆர்.முத்துச்செல்வி தலைமையிலும், வேப்பூ ரில் வட்டார பொருளாளர் ஆர். தனலட்சுமி தலைமையி லும், கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவ லகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பொரு ளாளர் ராணி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி, வட்டார தலைவர் அர்ச்சனா, வட்டார செயலாளர் கலைவாணி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.

மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.15 - தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி பெருநகர் வட்ட செயற்குழு கூட்டம் மன்னார்புரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பெருநகர் வட்டத் தலைவர் சத்தியநாராயணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் நாகை க.செல்வராஜூ சிறப்புரையாற்றினார்.  ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். விடுபட்டுப் போன ஒப்பந்த தொழிலாளர்களை, தேர்வு செய்ய வேண்டும். பணி வழங்காமல் உள்ள 5000 கேங் மேன்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். 56,000 காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கேங் மேன்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் திருச்சி பெருநகர் வட்டத் தலைவராக எச். சத்தியநாராயணன், செயலாளராக சிவ.செல்வன், பொருளாளராக செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மண்டல செயலாளர் க.காளிதாஸ் நன்றி கூறினார்.