districts

img

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், செப்.15 -  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின், பட்டுக்கோட்டை வட்டக் கிளையின் 102 ஆவது மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை வட்டத் தலைவர் த. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. சிவ.ரவிச்சந்திரன் வரவேற்றார். துணைத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார்.  செப்டம்பர் மாதத்தில் பிறந்த சங்க  உறுப்பினர்களுக்கு ந.செல்வம் தலைமை யாசிரியர் (ஓய்வு) பிறந்த நாள் வாழ்த்து கூறி னார். இணைச் செயலாளர் ஞானசூரியன் வேலை அறிக்கையையும், பொருளாளர் சோம.ஆறுமுகம் நிதி நிலை அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். இரண்டாவது நிகழ்வாக சிறந்த நூல் களுக்கான தமிழ்நாடு அரசின் ஐந்து விருது கள் பெற்றவரும், மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது மற்றும் “தன்வியின் பிறந்த நாள்” எனும் சிறார் நூலுக்காக 2024 ஆம் ஆண்டிற்கு சாகித்ய அகாடமியின் “பால புரஸ்கார்” விருது பெற்றவருமான பட்டுக் கோட்டையைச் சேர்ந்தவருமான, யூமா வாசுகிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ. சண்முகம் தலைமை வகித்தார். அறிமுக உரையை மேனாள் வட்டத் தலைவர் கண. கல்யாணம் வழங்கினார். பல படைப்புத்  தளங்களில் யூமா வாசுகியின் செயல்பாட்டி னைப் பாராட்டி கவிஞர் மா.ஸ்டாலின் சர வணன் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் யூமா வாசுகி ஏற்புரை யாற்றினார். இணைச் செயலாளர் இரா.புரு சோத்தமன் நன்றி கூறினார்.