districts

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி

கரூர், செப்.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடந்த வியாழக்கிழமை மாலை உயிரிழந்ததை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய குழு அலுவலகத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.பூரணம் தலைமை வகித் தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம் பேசினார். கரூர்  ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுமதி, புகளூர் நகராட்சி மன்ற  உறுப்பினர் இந்துமதி அரவிந்த் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பொன்னமராவதி புதுக்கோட்டை பொன்ன மராவதியில் பேருந்து நிலை யம் எதிரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமை வகித்தார்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் நாராயணன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் தோழர் சீத்தா ராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினர். திருக்கடையூர் மயிலாடுதுறை மாவட் டம், திருக்கடையூரில் சனிக் கிழமை நடந்த இரங்கல்  கூட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிர முகர்கள் இரங்கல் உரை யாற்றினர். தொடர்ந்து தோழர் யெச்சூரியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினர். முன்னதாக திருக்கடை யூர் முக்கிய வீதிகள் வழி யாக அமைதி ஊர்வலம் வந்து இரங்கல் கூட்டம் நடைபெற்ற சன்னதி வீதிக்கு  வந்தனர்.