மதுரை, ஆக.11- குழந்தைகளுக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு விரைவு நீதி மன்றம் வழங்கிய 5 ஆயுள் தண்டனை யை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்து, உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தெருவில் விளை யாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து, அவர்களை மிரட்டியும், துன் புறுத்தியும் பாலியல் தொல்லை கொடுத் துள்ளார் . பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற் றோர் குழந்தையின் உடலில் இருந்த காயத்தை அறிந்து விசாரித்ததில் நாரா யணன் பாலியல் தொல்லை கொடுத்த தாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்ப டையில் நாராயணன் கைது செய்யப் பட்டார். தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் நாராயணனுக்கு 5 ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி நாராயணன் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை வியாழனன்று விசா ரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேம லதா அமர்வு பிறப்பித்த உத்தரவில், 9 வயது மற்றும் அதற்கு குறைவான 4 குழந்தைகளை கொடூரமான முறை யில் பாலியல் தொந்தரவு செய்தது விசா ரணையில் உறுதியாகிறது. எனவே இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவான 5 ஆயுள் தண்டனை யை உறுதி செய்தும், மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய் தும் உத்தரவிட்டனர்.