districts

img

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது

கும்பகோணம், டிச.10-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலை அடுத்து ள்ள துக்காச்சி கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பிகை சமேத ஆபத்சகா யேஸ்வரர் திருக்கோவிலில், அண்மை யில் குடமுழுக்கு விமர்சனையாக நடைபெற்றது.  இத்திருக்கோயிலை பற்றி தீக்கதிர் நாளிதழில் ஆயிரம் வருடம் கண்ட ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோயில் என  விரிவான செய்தி வெளிவந்தது.

இத்திருக்கோவில், நூறு ஆண்டுக ளை கடந்தும் கும்பாபிஷேகம் செய்விக்க முடியாமல், சிதலமடைந்து கருங்கல் குவியலை போல் காட்சியளித்த இத்த லத்தை, பழமை மரபு மாறா இத்தலத்திய அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு பாரம்பரிய கட்டுமான நடைமுறையில் புனரமைக்கப்பட்டமைக்காக, யுனெஸ்கோ அமைப்பு, ஆசிய பசிபிக் பிராந்திய பகுதியில் சிறப்பு தனித்துவ விருது வழங்கி இக்கோயிலை மேலும் பெருமைப்படுத்தியுள்ளது.  

கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோயில் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி பி 1100) மற்றும் அவரை தொடர்ந்து வந்த விக்கிரம சோழன் (கி பி 1122) ஆகியோரால் சுமார் 1500 ஆண்டு களுக்கு முன்பு, தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ் வரர் திருக்கோவில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோவில், தாராசுரம் ஐயிராவதீஸ்வரர் திருக்கோ வில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக் கோவில் போன்ற வடிவமைப்பை ஒத்தது.

இங்குள்ள  துக்காட்சி ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 100 ஆண்டுக ளுக்கு பிறகு, நாலரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு 2023 செப்ட ம்பர் மாதம் 3 ஆம் தேதி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது  

   இங்கு 5 முக்கிய கல்வெட்டுக்கள் அமைந்துள்ளது. அதில், ஒன்றில் இத்தலம் தென்காளஹத்தி (தென்னக காளாஸ்திரி) சுவாமி இடர்களையும் நாதர் என்றும், சிவனை பூஜித்து, துர்க்கை பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்ததால், இது துர்க்கை ஆட்சி செய்யும் இடம் என்றும், எனவே, இது துர்க்கை ஆட்சி என்பது நாளடைவில் துக்காச்சி என மறுவி அழைக்கப்படுகிறது, இவ்வாலயத்தில், ஆதி சரபமூர்த்தி தனி சன்னதி கொண்டும் அதே போல் தெற்கு நோக்கி துர்க்கை அம்மன் தனி சன்னதி கொண்டும் அருள் பாலிக்கின்ற னர்,

இங்குள்ள சரபமூர்த்தி, திருபுவனம் சரபேஸ்வரர் மற்றும் தாராசுரம் சரபேஸ்வ ரர்களுக்கும் முன் அருள்பாலித்த பெருமானாக இவர் போற்றப்படுகிறார்.  இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயில், இராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு இணை கோயிலாக விளங்கி வருகிறது. இக்கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய பராமரிப்பு இன்றி சிதலமடைந்து கற்கு வியலாக கிடந்ததால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தடைப்பட்டிருந்தது.

பக்தர்களுடைய பெரும் முயற்சியினால் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வசந்தகுமார், தமயேந்தி தம்பதியினரின் பெருமுயற்சியினால் ரூபாய் நாலரை கோடி மதிப்பீட்டில் முழுமையாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  முதல் கால யாக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 3 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை 4 ஆம் கால யாக பூஜை நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.