districts

பணி ஆணை வழங்குவதில் பாரபட்சம் கூடாது!

கும்பகோணம், ஜூலை 25 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் திற்கு வந்த தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கரிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து  தொழிலாளர்கள் ஊழியர் சங்கம் (சிஐடியு)  சார்பில் மனு அளிக்கப்பட்டது.  கும்பகோணம் மண்டல பொதுச் செய லாளர் மணிமாறன், ஸ்தாபகத் தலைவர்  ஆர். மனோகரன் ஆகியோர் போக்கு வரத்து கழக கும்பகோணம் மண்டலத்தில்  உள்ள தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்றிட வலியுறுத்தி மனுவை  அளித்தனர்.

 அந்த மனுவில், “கிளைகளில் செயல் படுத்தப்படும் மதிய நேர உணவகத்தை நிறுத்திவிட்டு இரவு நேர உணவாக செயல்படுத்த எடுக்கும் கழக நிர்வாக நட வடிக்கையை நிறுத்த வேண்டும். அவற்றை  வழக்கம்போல் செயல்படுத்திட வேண்டும். நகரப் பேருந்துகள் முழு நாளும்  இயக்கப்படுகின்றன. இது தொழிலாளர் களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள தாக இல்லை. எனவே வழக்கம்போல் ஹால்ட் ஷிப்டாகவே இயக்கிட வேண்டும். நடத்துநர் - ஓட்டுநர் லைசன்ஸ் பெற்ற வர்களுக்கு மட்டுமே வாரிசு வேலை வழங் கப்படுகிறது.

தொழில்நுட்ப பிரிவு மற்றும்  அலுவலகப் பணிகளில் வாரிசு வேலை வழங்கிட வேண்டும். நோய் வாய்ப்பட்டு விபத்துக்குள்ளாகி ஓட்டுநர்-நடத்துநர்கள் தங்கள் பணியை  செய்ய இயலாத நிலையில் உள்ளவர் களுக்கு, ஊதிய ஒப்பந்த முடிவுகள் அடிப் படையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும்.  

தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குற்றச்சாட்டு குறிப்பாணைகளில் உண்மைத்  தன்மை மற்றும் நடைமுறை எதார்த்தங் களை கணக்கில் கொண்டு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இதில் அதீத தண்டனைகளை தவிர்க்க வேண்டும். பணிமனைகளை இணைப்பது, தகுதிச் சான்று பிரிவுகள், எப்சி யூனிட் இணைப்பு என்ற முறையில் தஞ்சாவூர், பொறையார், நாகப்பட்டினம், மன்னார்குடி பிரிவுகள்  செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இவைகள் அனைத்தையும் தொ டர்ந்து செயல்பாட்டில் வைக்க வேண்டும்.  பணி வழங்குவதில் பாரபட்சம் உள்ளது. எனவே சுழற்சி முறையில் பணி  வழங்கிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.