districts

img

கும்பகோணத்தில் மழையால் இடிந்த வீடுகள் ஆய்வு புதிய வீடு கட்டித் தர முதல்வரிடம் வலியுறுத்தப்படும்

கும்பகோணம், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் ஆதி திராவிடர் தெருவில் உள்ள சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்ட 90 வீடுகளும், கீழப்பறட்டை  கிராமத்தில் சுமார் 65 வீடுகளும் மழைக்  காலங்களில் தொடர்ந்து இடிந்து விழுகின்றன.

அண்மையில் ஃபெஞ்சால் புயலால் இடிந்து விழுந்து அபாயகரமான நிலை யிலும், அவ்வப்போது வீடுகளின் மேற் கூரைகள் இடிந்து குடியிருப்பவர்களை காயப்படுத்தும் உயிருக்கு அச்சமான நிலையும் உள்ளது. இதனைத் தொ டர்ந்து சிபிஎம் சார்பில் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து புதிய வீடு கட்ட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலை வரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பின ருமான நாகைமாலி கொத்தங்குடி, கீழப்பறட்டை ஆகிய பகுதியில் பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து இடிந்து விழுந்த  வீடுகளை பார்வையிட்டு ஆறுதல் தெரி வித்தார்.

அப்போது, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சிதில மடைந்து இடிந்த தொகுப்பு வீடுகளை அப் புறப்படுத்திவிட்டு, புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர உதவுங்கள் என  பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். 

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசுகையில், “பாதிக்கப் பட்ட மக்களின் பழமையான வீடுகளை அப்புறப்படுத்தி, புதிய கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர தஞ்சை மாவட்ட ஆட்சியரையும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரையும் நேரில் சந்தித்து உரிய ஏற்பாடு செய்ய வலி யுறுத்துகிறேன். டிச.9 அன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கொத்தங்குடி, கீழப்பறட்டை பகுதிகளில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உரிய வீடு கட்டித்தர தமிழக முதல்வரிடம் நேரில்  வலியுறுத்தப்படும்” என உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் அருளரசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் வாசு, கும்பகோணம் ஒன்றி யச் செயலாளர் கணேசன் மற்றும் ஒன்றிய  குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.