கும்பகோணம், டிச.22- கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக ஸ்ரீனி வாச இராமானுஜன் மையத்தில் உலக அளவிலான ஸ்ரீனிவாச இரா மானுஜர் 20 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் சாஸ்த்ரா இராமானுஜன் விருது வழங்கும் விழா டிச.20 அன்று தொடங்கி டிச.22 வரை நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், அமெரிக்கா கனெக்டிகட் பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் மற்றும் எலக்ட் சர்வதேச புள்ளியியல் மையத் தலைவர் நளினி ரவிசங்கர் சிறப்பு விருந்தி னராக பங்கேற்று 2024 ஆம் ஆண்டிற் கான சாஸ்த்ரா இராமானுஜன் விருதினை வழங்கினார்.
அமெரிக் காவின் ஜார்ஜியா பல்கலைக்கழக முனைவர் அலெக்ஸாண்டர் டண் இவ்விருதினைப் பெற்றார். இந்த விருதானது 10000 அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை மற்றும் விருதுப் பட்டயத் தினை உள்ளடக்கியது. இவ்விருது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் 2005 ஆம் ஆண்டு முதல் உலகளவில் ஸ்ரீனி வாச இரமானுஜரின் எண்ணியலில் சிறப்பான ஆராய்ச்சி செய்த 32 வயதிற்குட்பட்ட கணிதவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் சிறப்பு விருந்தினர் நளினி ரவிசங்கர் ஆற்றிய உரை யில், “இந்திய மாணவர்களின் ஒழுக்கமும், கல்வியில் குறிப்பாக கணிதவியலின் மீதான ஈடுபா டும் அர்ப்பணிப்பு உணர்வும் கல்வி யாளர்களால் பாராட்டப்படுகிறது.
இராமானுஜரின் எண்ணியல் கோட்பாடு நவீன அறிவியலின் குவாண்டம் கணினியியல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்ப டுத்துகிறது. எனவே இன்றைய இளைஞர் சமூகம் இராமானுஜரின் எண்ணியல் கோட்பாடு குறித்த புரிதலுடன் பயின்று, அதன் பயன் பாட்டினை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் வல்லுந ராக திகழவேண்டும்” என்றார்.
அமெரிக்கா ப்ளோரிடா பல்கலைக்கழக பேராசிரியரும் சாஸ்த்ரா இராமானுஜர் விருது குழு தலைவருமான பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி ஆற்றிய உரையில், “2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருதின் துவக்க கால வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும் அமெரிக்க கணித வியல் சமூகமும் சாஸ்த்ரா இராமா னுஜன் விருது பற்றிய வரலாறு மற்றும் விருது பெற்றவர்களின் விபரம் ஆகியவற்றை பிர சுரித்து இவ்விருதினை கௌரவப் படுத்தியுள்ளது.
மேலும் லண்டன் ராயல் சொசைட்டியும் இவ்விரு தினை பெருமைப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவிலான கணிதவிய லின் உயரிய விருதான பில்ட் விருது பெறுவதற்கான நுழைவு வாயிலாக இவ்விருது திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார். முன்னதாக சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டமிடல் மற்றும் வளர்ச்சி புலத்தலைவர் சுவாமி நாதன் வரவேற்று, சிறப்பு விருந்தி னருக்கு நினைவுப் பரிசினை வழங்கினார். இவ்விருதினைப் பெற்ற அமெரிக்கா ஜார்ஜியா பல்கலைக் கழக முனைவர் அலெக்ஸாண்டர் டண் கருத்தரங்கில் சொற்பொழிவு ஆற்றினார்.
இக்கணித மாநாட்டில் அமெ ரிக்கா, ஆஸ்திரியா, ஜெர்மனி, இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் பல்கலைக்கழகங் களைச் சார்ந்த கணிதப் பேராசிரி யர்கள் ஸ்ரீனிவாச இராமானுஜரின் எண்ணியல் கோட்பாடு தொடர்பு டைய பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். மேலும் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர் களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சீனிவாச ராமானுஜ மையப்புல தலைவர் ராமசாமி நன்றியுரையாற்றினார்.