கும்பகோணம், டிச.4- அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமை யகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியா ளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாமை முதன்மை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன், பொது மேலாளர் ஶ்ரீதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில் சிறப்பு பரிசோதனை கட்டணமின்றி வழங்கப் பட்டது. மேலும் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. இம்முகாமில் கண் மருத்துவர் பாபுசங்கர், கண் பரிசோ தகர்கள் முருகேசபாண்டியன், சுவேதா மற்றும் அலுவலர் கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.