districts

img

சிபிஎம் தஞ்சாவூர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

கும்பகோணம், டிச.18 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தஞ்சாவூர் மாவட்ட 24 ஆவது மாநாட்டின், 2 ஆவது நாளான புதன் கிழமை கும்பகோணத்தில் பிரதிநிதி கள் மாநாடு துவங்கியது.

துவக்க நிகழ்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர்  பி.ராமமூர்த்தி நினைவாக அவரது சொந்த ஊரான வேப்பத்தூரில் இருந்து  எடுத்து வரப்பட்ட மாநாட்டுக் கொடி மரம், கொடிக் கயிறை மாவட்டக்  குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி எடுத்துக் கொடுக்க, மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கட்சிக்கொடி ஏற்றினார். பிரதிநிதிகள் மாநாடு துவக்கத்தில் சிபிஎம் வர லாற்றுக் கண்காட்சி அரங்கத்தை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி திறந்து வைத்தார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

வரவேற்புக்குழு தலைவர் ஆர்.ராஜகோபாலன் வரவேற்றார். தலைமைக்குழு உறுப்பினர்களாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  ஆர். மனோகரன், மாவட்டக் குழு  உறுப்பினர் இ.வசந்தி, சேதுபாவா சத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் அரசியல் ஸ்தாபன வேலையறிக்கை வாசித்தார். தொ டர்ந்து வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தல், பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.  விழாவில் மூத்த தலைவர்கள்,  சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்ட னர்.