கும்பகோணம், ஜூலை 18- கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில் ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்ப பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றி வரு கின்றனர் இப்பணிமனையில் போதுமான அடிப்படை வசதி இல்லாமலும் தொழி லாளர்கள் பல்வேறு சிர மங்களுக்கிடையே பணி யாற்றுகின்றனர்.இந்நிலை யில் கடந்த ஐந்து நாட்க ளுக்கு முன்பு அன்பு செழி யன் என்கின்ற நடத்துநரை சென்னைக்கு சென்று வர பணி அமர்த்தி அதனைத் தொடர்ந்து ஐந்து நாள் பணி யாற்றி விட்டு ஆறாம் நாள் கும்பகோணத்திற்கு வருகை தந்தார்.
அப்பொழுது கிளை மேலாளர் சேகர், கலெக்சன் குறைவாக உள்ளது.திரும்ப வும் சென்னைக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட் டார். இதனை அடுத்து நடத்து னர் அன்புச் செழியன், தொட ர்ந்து ஐந்து நாள் பணியாற்றி வந்து வருகிறேன். எனக்கு ஓய்வு வேண்டும் என கேட் டுள்ளார் இதனை மறுத்து அலட்சியப் போக்கில் அதி காரத்துடன் ,”நீ வேலைக்கு போகவில்லை என்றால் உன் மீது நடவடிக்கை எடுப்பேன்” என மிரட்டியுள்ளார்.
இதனால் தொழிலாளர் களை அலட்சியப்படுத்தி அதிகாரத்தின் பெயரில் தொழிலாளர்களுக்கு விரோ தமாக செயல்படும் கிளை மேலாளர் சேகர் மீது நட வடிக்கை எடுக்க கோரி போக்குவரத்து கிளை அலு வலகம் முன்பு அனைத்து தொழிலாளர்களும் வேலை யை நிறுத்தி கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து பணிபுரிய கட்டா யப்படுத்தும் கிளை மேலா ளர் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல் அதிகாரிகள் இது சம்பந்த மாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டத் தில் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கோட்ட துணை மேலாளர் ,தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் கிளை மேலாளர் சேகர் கூறி யது தவறுதான் என்றும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனி தொழிலாளர்களுக்கு இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் உறுதி அளித்தனர் இதனால் போராட்டம் தற்கா லிகமாக விலக்கிக் கொள் ளப்பட்டது.