districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்க கோரிக்கை

கும்பகோணம், டிச.4- உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் திருநீலக்குடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறப்பு பேரவை  நடை பெற்றது பேரவைக்கு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெசிந்தா ராணி தலைமை வகித்தார்.

முன்னதாக கடைவீதியில் இருந்து மாற்றுத்திறனாளி கள் திரளாக பேரணியாக  வந்தனர். கிளை  செயலாளர் காளிமுத்து சங்கக்கொடியை ஏற்றினார் மாவட்ட பொறுப்பாளர்கள் சேகர், சுகுமார், சுபாஷ், திருநீலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் மற்றும் சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜன்  சிற்றரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தஞ்சை மாவட்ட செயலாளர் இளங்கோ வன் நிறைவுரை ஆற்றினார் பேரவையில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும் ரேசன் கடையில் 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சியில் மாற்றுத்திற னாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கி  முழு சம்பளமான ரூ.319 குறை வில்லாமல் வழங்க வேண்டும் குடிமனை பட்டா இல்லாத மாற்றுத்திற னாளிகளுக்கு அனைவருக்கும் குடி மனை பட்டா வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கிளைச் செயலாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.