கும்பகோணம், ஜூலை 25- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் 23 புதிய பேருந்து களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அப்போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் தெரிவிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்குகிற பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்து களை இயக்குவதற்கு தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 1000 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. நாடாளுமன்றத் தேர்த லுக்குப் பிறகு 300 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 பணி மனைகளுக்கு புதிய மற்றும் கூண்டு புனர மைக்கப்பட்ட (கட்டமைக்கப்பட்ட) 88 பேருந் துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 54 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வியாழனன்று கும்பகோணம் மண்டலத்தில் 23 புதிய பேருந்துகள் மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மொத்தம் 7200 பேருந்துகள் வாங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார். அதே போல் 1200 பழைய பேருந்து களில், அடித்தள சட்டம் சிறப்பாக உள்ள பேருந்துகளில், புதுப்பொலிவிற்கு நிதி ஒதுக்கியதில் 800 பேருந்துகள் புதுப்பொலிவு டன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டன.
தமிழக முதலமைச்சர் 500 மின்சார பேருந் துகள் வாங்க உத்தரவிடப்பட்டதில் முதல் 100 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. அவை விரைவில் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கும்பகோணம் போக்குவரத்துக் கழ கத்தில் நவக்கிரக கோயில்களுக்கு செல்ல வார விடுமுறை நாட்களில் இயங்கி வந்த பேருந்துகள், தற்போது அனைத்து நாட்களி லும் குளிரூட்டப்பட்ட பேருந்து மற்றும் குளிரூட்டப்படாத பேருந்து இயக்கப்படு கின்றன. விரைவில் முருகன் கோயில்களுக்கு பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். போக்குவரத்து தொழிலாளர் களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரை வில் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.