கிருஷ்ணகிரி,செப்.21- கிருஷ்ணகிரி மாணவிகள் பாலியல் வன் கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனி யார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக ளுக்கு ஆளாக்கியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு கடந்த மாதம் 23 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்து அதன் அடிப்ப டையில் தயார் செய்த அறிக்கையை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமீபகாலமாக, பெண்கள், குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகள் அளவு கடந்து சென்று கொண்டுள்ளது.இதன் பின்ன ணியில், சமூக சிந்தனையுள்ள ஜனநாயக அமைப்புகள்,பெண்கள் அமைப்புகளும் தொடர்ந்து போராடியதன் விளைவாக 2012இல் போக்சோ சட்டம் இயற்றப்பட்டது.ஆனால் குற்றங்கள் குறையவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் லட்சத்திற்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
பொது வெளியில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்,ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடு மைகள், கள்ளக்குறிச்சி சம்பவம். கொல் கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி பேராசி ரியை பாலியல் வன்கொடுமை,கொலை செய் யப்பட்ட சம்பவங்களுக்கு நீதி கேட்டு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கமும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வருகின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு
பெண்களுக்கு,மாணவிகளுக்கு வீட்டிற்குள் ளும் வெளியிலும் பாலியல் வன்கொடுமைகள் வன்முறைகள் ஏற்படுவது அதிகரித்து வரு கிறது.தேசிய குற்ற ஆவண காப்பகம் 2023 இல் வெளியிட்டது.இதில் 2022 இல் பெண்கள் மீதான வன்முறைகள் 4 விழுக்காடு அதிகரித்திருப்ப தாக கூறியுள்ளது.2020இல் 3,71,253 ஆக இருந்த குற்றங்கள் 2022 இல் 4,45 256 ஆக அதி கரித்துள்ளது.பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் 2012,தில்லியில் நிர்பயா சம்ப வத்திற்கு பிறகு கடுமையாக்கப்பட்டது; பலப் படுத்தப்பட்டது; பாலியல் வன்முறை என்ப தற்கும் வரையறையும் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. 2012 இல் 25000 பாலியல் வல்லுறவு வழக்கு பதிவாகின. 2022 இல் 31 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தேசத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் பின்னணியில் தான் கிருஷ்ண கிரி மாவட்ட சம்பவத்தை ஆய்வு செய்து அதன் உண்மை தன்மைகளை அறிக்கையாக வெளி யிடுகிறோம்.
போலி என்சிசி முகாம்
கந்திகுப்பம் தனியார் பள்ளி 1982 இல் இருந்து இயங்கி வருகிறது. இங்கு 800 மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஆண் ஆசிரியர்கள் உட்பட 60 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு என்சிசி முகாம் நடைபெறுவதில்லை. இப் பள்ளியின் முதல்வர் சதீஷ், 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவராமன் என்பவரை என்சிசி முகாமுக்கு பயிற்சியாளராக நியமித்துள்ளார். அதன் பிறகு இச்சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலி என்சிசி முகாமுக்கு திட்டமிட்டு மாணவர்களிடம் 1500 ரூபாய் வீதம் வசூலித்து சிஆர்பிஎஃப் இல் இருந்து ஓய்வு பெற்ற சுப்பிர மணி என்பவரை கொண்டு பயிற்சி கொடுத்துள் ளனர்.
இதில் 8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் 17 மாணவர்கள் 13 மாணவி கள் பங்கேற்றுள்ளனர். 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டதை ஒட்டி பிரதான குற்றவாளி சிவராமன் உட்பட இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
5 பள்ளிகளில் முகாம் நடத்தியதில் இதே போல் பல மாணவிகளுக்கு பாலியல் வன்கொடு மைகள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பெற்றோரின் புகாருக்குப் பிறகே நடவடிக்கை
குற்றத்தை முழுமையாக மறைப்பதற்கா கவே பிரதான குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவரா மன் கால் உடைந்து மருத்துவமனையில் இருந்த நிலையில் எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்து விட்டார் என்று கூறப்படுவதும், அவர் தந்தை விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுவதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததற்கு பிறகு, ஊட கங்கள் மூலம் பல விஷயங்கள் வெளிச்சத்து க்கு வந்த பிறகுதான் காவல்துறையும்,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அரசு தரப்பில் இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக் கள் அமைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு நடந்த இக்கொடுமை களை பெற்றோர்களிடம் கூறிய பல மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.பிரதான குற்றவாளியான சிவராமனுடன் நாம் தமிழர் கட்சியின் பல நிர்வாகிகளும் இச்சம்பவத்தில் சம்பந்தப் பட்டு கைதாகியுள்ளனர்.
தமிழக அரசுக்கு முன்வைக்கப்படும் ஆலோசனைகள்
இது குறித்து மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையின்படி தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு சில ஆலோசனைகள் முன்வைக்கப்படுகிறது.
1.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் என்சிசி பயிற்சி வகுப்பானது முறையாக அனுமதி பெற்று நடத்தப்படவில்லை எனில் பயிற்சியை தடைசெய்வதுடன் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
2.அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ- மாணவிகளுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாலியல்
வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
3.கிருஷ்ணகிரியில் சிவராமன் பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும் விசாரணை நடத்தவேண்டும்.
4.கல்வி நிலையங்களில் இது போன்ற சம்பவம்நடைபெறாத அளவிற்கு மாநில அளவில் குழந்தைகள் நல அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
5.பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்கி பாதிப்பில் இருந்து மீட்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களின் கல்வி தொடரஉத்தரவாதம் செய்ய வேண்டும்.
6.சிவராமனை தவிர மற்ற குற்றவாளிகளுக்கு தண்டனை விரைவில் வழங்க ஏதுவாக குற்றஅறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்,
7.அனைத்து பள்ளிகளிலும் உள் புகார் கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.
8.இந்த போலி என்சிசி முகாமில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான 13 மாணவிகளுக்கு கல்வி கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும். மேலும்,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும்.
9.என்சிசி,சாரணியர் இயக்கம்,நாட்டு நலப்பணிதிட்டம் போன்ற இயக்கங்கள் இருக்கும் கல்வி
நிலைய பட்டியலை அரசு கண்காணித்து இணைய வெளியில் பட்டியல் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
10.சிவராமன் மட்டுமே குற்றவாளியா? அவருக்கு காவல்துறை பாதுகாப்பில் இருக்கும் போது எலி மருந்து எப்படி கிடைத்தது? பல பள்ளிகளில் என்சிசி முகாம் நடத்த முடியும் என்றால் மாவட்ட என்சிசி அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்குமா? ,இங்கு சிவராமன் மூலம் நடந்த போலி என்சிசி முகாம் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்று பரிசு வழங்கிய காவல்துறை அதிகாரி யார்? ஆசிரியை ஜெனிபரின் மகள் மட்டும் என்சிசி முகாமில்இரவில் தங்காத காரணம்என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காணாமல் இருக்கும் சூழலில், மேற்படி பள்ளியில் நடைபெற்ற பாலியல் புகார் சம்பந்தமான வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு கட்டாயம் சிபிசிஐடிக்கு மாற்றி விரைவாக குற்ற அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மனிதம் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வழக்கறிஞர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப் பினர் பி.டில்லிபாபு,மாவட்டச் செயலாளர் ஜி.கே நஞ்சுண்டன்,செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா,தலைவர் சரஸ் வதி,மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா, லெனின் முருகன் உடனிருந்தனர்.
இந்த போலி என்சிசி முகாமில் மாணவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கள ஆய்வு செய்த உண்மை அறியும் குழுவில் சேலம் மனிதம் அமைப்பின் மாநில உப குழு உறுப்பினர் எம். குணசேகரன்,கோவை வழக்க றிஞர் என்.ராமர்,திருப்பூர் வழக்கறிஞர் பொன் ராம்,கோவை வழக்கறிஞர் டி.சுதா, சிபிஎம் கிருஷ்ணகிரி வட்டச் செயலாளர் பெரியசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா, தீக்கதிர் கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் ஒய். சந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.