கிருஷ்ணகிரி,டிச.11- உலக இளையோர் திறன் விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று ஓசூர் டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஆர்.பேபி சஹானா சாதனை படைத்துள்ளார். ஓசூர் மாநகர் மத்திகிரியை சேர்ந்த ரவி,செல்வலட்சுமி தம்பதியின் மகளான ஆர்.பேபி சஹானா(21) ஆரம்பப்பள்ளி பருவம் முதல் முதல் டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக திகழ்கிறார்.
டிசம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உலகத் திறன் இளையோர் டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று இந்தியாவுக்கும்,தமிழ் நாட்டிற்கும்,ஓசூர் மாநகருக்கும் பெருமையை தேடித்தந்துள்ளார்.
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்று முதல் இடத்தை பிடிப்பதே எனது முதன்மையான இலக்கு என்றார். டேபிள் டென்னிஸ் வீராங்கனை பேபி சஹானாவை குடியிருப்பின் தலைவர் சதீஷ்குமார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரஸ்வதி, மாநகர செயலாளர் ரத்னா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி ஆகியோர் பேபி சந்தித்து சால்வை அணிவித்து ஒலிம்பிக் விளையாட்டிலும் முதல் இடத்தில் பதக்கம் வெல்ல வாழ்த்து தெரிவித்தனர்.