கிருஷ்ணகிரி, ஜூலை 13- ஓசூரில் சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரி தொழில்முனைவோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசோக் லேலண்ட்,டைட்டான், டிவிஎஸ், டாட்டா குழுமங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை சார்ந்து 2500க்கும் மேற்பட்ட சிறு - குறு நடுத்தர தொழிற் நிறு வனங்கள் 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழி லாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பெருந்தொற்று, பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு உருளை, இரும்பு பொருட்களின் கடுமையான விலை யேற்றம் காரணமாக சிறு-குறு, நடுத்தர தொழில்கள், நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கும், விநியோகிக்கும் பொருட்களுக்கும் பெரும் நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையை தருவதால் பெருத்த நட்டம் ஏற்பட்டு தொழில் கள் நடத்துவதில் மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நூறு தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
எனவே, சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்க ளுக்கு ஒன்றிய-மாநில அரசுகள் நியாயமான விலை நிர்ணயிக்க வலியுறுத்தி தொழில்முனைவோர் ஒன்றிணைந்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த னர். இதனையடுத்து, புதனன்று (ஜூலை 13) தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டம் வியாழ னன்றும் (ஜூலை 14)நடை பெறுகிறது. தொழில்முனைவோர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாநக ராட்சி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அருகில் 2000 க்கும் மேற்பட்ட தொழில் முனை வோர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஓசூர் சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் (ஹோஸ்டியா) சங்கத்தின் தலை வர் வேல்முருகன், முன்னாள் தலை வர் வெற்றி ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.