districts

ரூ. 36 லட்சம் வரை பணமோசடியிலும் ஈடுபட்ட சிவராமன்

கிருஷ்ணகிரி, ஆக. 22 - போலி என்சிசி முகாம் நடத்தி 13 சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த (தற்போது நீக்கப்பட்டு விட்டார்) மாவட்டச் செயலாளர் சிவராமன் (32) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் ரூ. 36 லட்சம் பண மோசடியிலும் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு ரூ. 36 லட்சம் மோசடி செய்துள்ளதாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் புதனன்று (ஆக.21) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.