கிருஷ்ணகிரி, ஆக. 22 - பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் 13 வயது சிறுமியை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்டச் செய லாளரும், போலி பயிற்சியாளருமான சிவராமன் (30) பாலியல் வன்கொடு மை செய்த புகாரில் கைதுசெய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை மறைத்த பள்ளி யின் தாளாளர், முதல்வர், ஆசிரியர் கள், என்சிசி போலி பயிற்சியாளர்கள் உட்பட 11 பேரையும் போக்சோ சட்டத் தின் கீழ் போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்துள்ளனர்.
சிவராமன், கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக இதேபோல போலி என்சிசி முகாம் மூலம் சிறுமியர்க்கு பாலி யல் துன்புறுத்தல் அளித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களின் பேரில், அதுகுறித்து விசாரணை நடத்திட, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்த ரவு பேரில், பவானீஸ்வரி ஐபிஎஸ் தலை மையில் சிறப்பு புலனாய்வு குழுவும் (SIT), சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவும் (MDT)அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர், வியாழனன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் கே.எம். சரயு, எஸ்.பி. தங்கதுரை ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினர். இதனை தொடர்ந்து பவானீஸ்வரி, ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
“கிருஷ்ணகிரியில் நடந்த துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், இந்த தக வல்களை மறைத்தவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட்டு, கடுமையான தண்டனை பெற்று தரப்படும். தற்போது முதல்வ ரின் உத்தரவின் பேரில், சிறப்பு புல னாய்வுக் குழு, பல்நோக்கு குழுவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளோம்.
தற்போது வந்துள்ள புகார் மற்று மின்றி, வேறு எங்காவது இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா, என்பதை கண்டறிந்து, அதில் தொடர்பு டையவர்கள் அனைவரையும், கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி கடுமை யான தண்டனை பெற்று தரப்படும். புகாருக்குள்ளான தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுக்கு உள வியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி எந்த அரசு மற்றும் தனியார் பள்ளிக ளில் நடைபெறாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு குறித்து அரசுக்கு இக்குழு அறிக்கையாக பரிந்துரை செய்யும்.
சிவராமன், கைது செய்யப்படு வதற்கு 2 நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தியுள்ளார். அவருக்கு, கிருஷ்ண கிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களின் பரிந்து ரைப்படி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவராமன் மீது பாலியல் வன்கொடு மை தொடர்பாக மேலும் ஒரு புகார் வந்து ள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இது போன்ற சம்பவங்கள் குறித்து பெற்றோர் கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளிக்க தயங்குவதால் தான், இது போன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் அச்சமின்றி மேலும், மேலும் தவறு செய்கிறார்கள். பள்ளி, குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும் என யாரும் அஞ்ச வேண்டாம். 1098 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிகளில் நடக்கும் எந்த பயிற்சி வகுப்புகளாக இருந்தாலும், கட் டாயம் ஆசிரியை ஒருவர் உடனிருக்க வேண்டும் என பரிந்துரை செய்வோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள் ளனர்.