கிருஷ்ணகிரி, ஆக. 23 - பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் 13 வயது சிறுமியை, காவேரிப்பட்டி னத்தைச் சேர்ந்தவரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்டச் செய லாளருமான சிவராமன் (30) பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், தாளா ளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்கள் சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி, சிவராமன் ஆகியோரை பர்கூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், அனு மதி இல்லாமல் கடந்த சில ஆண்டு களாகவே போலி என்சிசி முகாம் மூலம் சிறுமியர்க்கு பாலியல் துன்புறுத்தல் அளிப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளி யான பின்னணியில், அதுகுறித்து தமி ழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பேரில், பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு வும் (SIT), சமூக நலத்துறை செயலா ளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை யில் பல்நோக்கு குழுவும் (MDT) அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப் பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதான சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக வும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை விளக்கம்
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை யினர், “போலீசார் கைது செய்யும் போது தப்பி ஓடிய சிவராமன் தடு மாறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, கிருஷ்ண கிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சிவராமனை விசாரணை செய்து பரிசோதனை செய்த போது சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்கள் முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, சிவராமன் உயிரைக் காப்பாற்ற கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்து வர்கள் பரிந்துரையின் அடிப்படை யில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த கடந்த மாதமும் 9-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுமியர்க்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி வழக்கறி ஞரான ஏ.பி. சூர்யபிரகாசம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் முறையீடு செய்தார்.
அப்போது, இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் விசாரிக்கப் படும், என்று நீதிபதிகள் தெரி விக்கவே, வழக்கறிஞர் ஏ.பி. சூரிய பிரகாசம் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சிவராமனின் தந்தை விபத்தில் பலி
இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சிவராம னின், தந்தை அசோக் குமார், குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலியாகி யுள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சி களும் வெளியாகியுள்ளன.