districts

போலி என்சிசி முகாம்; பாலியல் வன்கொடுமை மாதர் சங்கம் கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி  என்சிசி முகாம் நடத்தி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நாம்  தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மற்றும் இக்குற்றத்தை மூடி மறைக்க முயற்சி செய்த தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் மற்றும் தாளாளர் சாந்தன், ஆசிரியர் ஜெனிபர், பயிற்சியாளர்கள் இந்து ,சக்திவேல் சத்யா, சுப்பிரமணி உள்ளிட்ட ஏழு பேர் இதுவரை கைது  செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை யின் உடனடி நடவடிக்கையை அனைத்திந்திய  ஜனநாயகம் மாதர் சங்கம் பாராட்டுகிறது.

மேலும் இவ்வழக்கில் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உரிய கவுன்சிலிங் மற்றும் கல்வி கற்பதற்கான உகந்த சூழலை அப்பள்ளி நிர்வாக மும் கல்வித்துறையும் செய்து தர வேண்டும்; அப்பள்ளியில் இது போன்று வேறு குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளனவா என்பது குறித்த முழு விசாரணையும் நடத்திட வேண்டும்; குற்றத்தை மூடி மறைக்க முற்பட்ட அனைவர் மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டு குற்றவாளிகள் அனை வரும் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற போலி பயிற்சியாளர்கள் அம்மாவட்டத்தில் வேறு யாரும் இருந்தாலும் அவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ் வாலண்டினா. 
பொதுச் செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து...