கிருஷ்ணகிரி,ஆக.23-– பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட வழக்கில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளையும் சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியா ளர்களை சந்தித்த கே. பாலகிருஷ் ணன் “தனியார் பள்ளியில் போலி யான என்சிசி முகம் நடத்தியதும் 13 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது”என்றார்.
விதிமுறைகளை மீறி ஒரு தனியார் பள்ளியில், 5 நாட்கள் முகாம் என்ற பெயரில் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், இது போன்ற நிகழ்வுகள் வேறு எந்த எந்த பள்ளிகளில் நடந்திருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கே. பால கிருஷ்ணன் வலியுறுத்தினார். இந்த சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் வெளிவரக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு சிவராமன் மரணம் நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இவ் வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சிவராமன், அவ ரது தந்தை மரணம் குறித்த சந்தே கங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். என்சிசி, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் முகாம்கள் கூட பல பள்ளிகளில் அனுமதி பெறாமல் நடந்து வருகிறது தகவல் கூறு கின்றன.
எனவே, தனியார் பள்ளி களுக்கு எந்த வகையில் தொடர்பு இல்லாத எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் இதுபோன்ற பயிற்சி அளிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழு விசாரணையை தீவிரப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாக கூறி, கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி வனச் சரணாலயம் பகுதியை சுற்றி யுள்ள 164 கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொடர் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அது போல சில இடை யூறான திட்டங்களும் வருகிறது. இதையெல்லாம் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்த சந்திப்பின்போது கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், கோவிந்தசாமி, பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலமேரி, இடைக்குழு செய லாளர்கள் பெரியசாமி, சீனிவாசன், வெங்கடேஷ் ஆகியோர் உடனி ருந்தனர்.