districts

img

100 நாள் வேலை திட்ட நிதியை குறைக்காதே விவசாயத் தொழிலாளர் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, டிச. 19- 100 நாள் வேலை திட்ட நிதியை ஒன்றிய அரசு வெட்டுவதை கண்டித்தும், 100 நாள் வேலையை 150 நாளாகவும், கூலியை 600 ஆகவும் உயரத்த வலி யுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 3ஆவது மாநாடு ஊத்தங்கரையில் தோழர் நாகரத்தினம் அண்ணாஜி நினைவரங்கில் நடைபெற்றது.சங்கக் கொடியை வெங்கடாசலம் ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் கேசி.ராமசாமி, கல்பனா, முருகன், நாராயணமூர்த்தி, ரத்தினம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் வி கோவிந்தசாமி வேலை அறிக்கையை யும், பொருளாளர் செல்வராசு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வர் பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செய லாளர் எம்.முத்து மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வேலு வரவேற்றார். சேகர் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
ஊத்தங்கரையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்,. 100 நாள் வேலை திட்ட நிதியை குறைக்கக் கூடாது, 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி, கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், சிங்காரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவ மனையாகவும், ஊத்தங்கரை மருத்துவமனையை எக்ஸ்ரே, ஸ்கேன், அனைத்து பரிசோதனை கூடங்களுடன் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது கைதாகி சேலம் சிறையில் இருந்த 30 பேர் இம் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ஜி.பெரியசாமி, செயலாளராக வீ.கோவிந்தசாமி, பொருளாளராக கே.செல்வராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்