கிருஷ்ணகிரி, ஆக. 22 - கந்திக்குப்பம் கிங்ஸ்லி என்ற தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்.சி.சி. முகாமில் 13 வயது சிறுமியை, நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவராமன் (தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்) பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறுமி மட்டுமல்லாமல், 13-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இதேபோல பாலியல் வன்கொடுமைக்கு உள்ளா க்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த பின்னணியில், குற்றச் செய லில் ஈடுபட்ட சிவராமன், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளித் தாளாளர், முதல்வர் உட்பட 11 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, கிங்ஸ்லி பள்ளியில் நடத்தப்பட்ட என்சிசி முகாமே போலி என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்கு நர் பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார்.
இதில், அனுமதி பெறுவதற் கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளார். அதில், “முகாம்களுக்கு மாநில அமைப்புகள் மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்த ஒரு அமைப்பும் பள்ளிகளில் செயல்படக்கூடாது, மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமும், மாணவி யருக்கு பெண் ஆசிரியர்கள் மூலமுமே பயிற்சிகள் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்கள் பாதுகாப்பின்றி எந்த ஒரு அமைப்பு சார்பாகவும் மாணவ, மாணவியர்களை முகாம்களில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், முகாம்களில் பங்கேற்பது தொடர்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பொற்றோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.