கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அய்யன்காளி மண்டபத்தில் செப். 25 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன், மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பி.சி.விஷ்ணுநாத், சிபிஐ தேசிய கவுன்சில் உறுப்பினர் பன்னியன் ரவீந்திரன், கேரள காங்கிரஸ் (எம்) உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ஜெயராஜ், முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பி.எம்.ஏ.சலாம், தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் பி.சி.சாக்கோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று,”இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மரபை பாதுகாக்கப் போராடியவர் சீத்தாராம் யெச்சூரி” என புகழாரம் சூட்டினர்.