districts

img

சிபிஎம் திருச்சூர் மாவட்டக் குழுவின் வங்கிக் கணக்கு முடக்க உத்தரவை நிறுத்தி வைத்திடுக!

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்  தில் அளித்த உறுதிமொழி யை மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழு வின் வங்கிக் கணக்கு வருமான  வரித்துறையினரால் முடக்கப்பட்டி ருக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி, தலைமைத் தேர்  தல் ஆணையர், ராஜீவ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

“அன்பார்ந்த திரு. ராஜீவ் குமார்  ஜி, சமீப காலங்களில் முதன்முறை யாக ஒன்றிய அரசின் கீழ் இயங்கிடும் முகமை ஒன்று, 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறக்கூடிய சூழலில் அனைத்துக் கட்சிகளுடனும் சம நிலையில் செயல்படாமல் மிகவும் மோசமான முறையில் தரம் தாழ்ந்து  நடந்துகொண்டுள்ளது என்பதை தேர்  தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

கண்டிக்கத்தக்கது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சூர் மாவட்டக் குழுவின்  வங்கிக் கணக்குகள் முற்றிலும் முறை யற்று இருப்பதாகக் கூறி வருமான  வரித்துறையினர் நோட்டீஸ்கள் அனுப்பி  யிருக்கின்றனர். இது மிகவும் கண்டிக்  கத்தக்கதாகும். கட்சியின் சார்பாக  நாடு முழுவதும் உள்ள கணக்குகளு டன் இந்தக் கணக்கின் விவரங்களும்  ஏற்கனவே வருமான வரித்துறையின ருக்கும், தலைமைத் தேர்தல் ஆணை யத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டு, அவை அவற்றின் இணைய தளங்களி லும் வெளியாகி இருக்கின்றன.

கட்டாயமில்லை எனினும் கணக்குகள் சமர்ப்பிப்பு
இவை தொடர்பாக இத்தனை  ஆண்டு காலத்தில் எவ்விதமான ஆட்  சேபணைகளும் எழுப்பப்பட வில்லை. கடந்த காலங்களில் பல முறை வருமான வரித்துறையினர் வருமான வரிச் சட்டங்களை மிகச்  சரியாகக் கடைப்பிடித்து வருவதற் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை பல சமயங்களில் பாராட்டியும் இருக்கிறார்கள். இயற்கையாகவே இந்தக் கணக்குகள் தலைமைத் தேர்  தல் ஆணையத்திற்கு முன்பும் சமர்ப் பிக்கப்படுபவைகளாகும். மேலும், இவ்வாறு சமர்ப்பிக்கவேண்டும் என்று சட்டரீதியாக கட்டாயம் இல்லை என்றபோதிலும்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது வாழ்வில்  ஒழுக்கத்தைக் கடைப்பிடித்திடும் கட்சி என்ற முறையில் மற்ற கட்சி களுக்கு முன் உதாரணமாக விளங்க  வேண்டும் என்ற விதத்தில் இதனைத்  தன் இணைய தளத்தில் வெளியிட்டி ருக்கிறது.

நடவடிக்கைக்கு முன் வருமான வரித்துறை ஆணையத்தை அணுகியதா?
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு எதி ராக மோடி அரசாங்கம் மேற் கொண்டுள்ள திட்டமிட்ட அரசியல் உள்நோக்கத்தின் ஒரு பகுதியாக இது நடக்கிறது என்பது உண்மை. முன்னதாக, இதே வருமான வரித்  துறை, உச்சநீதிமன்றத்தின் முன்,  தேர்தல் நடைபெறும் சமயத்தில்  இதுபோன்று எந்தவொரு கட்சி யின் வங்கிக் கணக்கையும் முடக்க  மாட்டோம் என்று வேறொரு பிரச்  சனை தொடர்பாக வழக்கு வந்த போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வருமான வரித்துறையினர் இது போன்று நடவடிக்கையை மேற்  கொள்வதற்கு முன்பு, தேர்தல் ஆணையத்தை அணுகியதா என்  பது குறித்து எங்களுக்குத் தெரிய வில்லை.

விதிமீறல்:  பாஜகவுக்கு ஆதரவு!
தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்  தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர், வருமான வரித்துறையின ரின் இந்நடவடிக்கை அனைத்துக் கட்சிகளையும் சமமாகப் பாவிக்கும்  தன்மையை மீறும் செயலாகும். தேர்  தலை நியாயமாகவும் நேர்மையாக வும் நடத்துவதைப் பாதித்திடும் விதத்  தில் உள்ளதாகும். திருச்சூர் மக்கள வைத் தொகுதியில் பாஜக போட்டி யிடுவது வெறும் தற்செயலானதா?

எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்  பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க, தேர் தல் நடைமுறை முடியும் வரையிலும் வருமான வரித்துறையினரின் அரு வருக்கத்தக்க இந்த உத்தரவை நிறுத்தி வைத்திட தாங்கள் கட்டளை யிடவேண்டும் என்று உங்களை நாங்  கள் வலியுறுத்துகிறோம்.”

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.(ந.நி.)