districts

img

திருச்சூர் பூரம் விழா சதி குறித்து விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பூரம் திரு விழாவில் சதி செய்ய சில முயற்சி கள் நடந்ததாகவும், இது குறித்து ஏடிஜிபி அஜித்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டிருந்ததாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

அதன்படி அந்த அறிக்கை கடந்த மாதம் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பூரம் விழாவை நடத்த கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத னால் அந்த அறிவிக்கை விரிவான தாக இல்லை. குறைபாடுகள் உள் ளன. பூரம் விழாவில் சதி செய்ய சங்பரிவார் அமைப்புகள் முயற்சி த்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சமூக விழாவில் இது போன்ற இடையூறு களை நாங்கள் அனு மதிக்க மாட்டோம். அதனால் பூரம் விழாவில் நடந்த சதி குறித்து 3 கட்ட விசாரணை நடத்தப் படும். பூரம் விழா வில் ஏற்பட்ட சதி தொடர்பாக சட்டம் ஒழுங்குஏடிஜிபி அஜித்குமாரின் தோல்விகள் குறித்து டிஜிபி விசாரணை நடத்துவார். 

பூரம் விழாவில் நடைபெற்ற குற்றங்கள் சட்டவிரோத செயல்கள் குறித்து குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்துவர். பூரம் விழாவை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் அரசு அதிகாரிகள் தவறினார்களா என்பது குறித்து உளவுத்துறை ஏடிஜிபி விசாரணை நடத்துவார் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.