districts

img

நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாதது ஒன்றிய அரசின் கொடூரம்

கேரளத்தில் வயநாடு மாவட்டம் முண்டக்கை நிலச்சரிவில் பாதிக்கப் பட்டவர்களின் உயிர்வாழ்த லுக்கும் மறுவாழ்வுக்காகவும் அனைத்தையும் செய்ய வேண்டிய நேரத்தில் ஒன்றிய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மேப்பாடியில் உள்ள பொது மக்களை நேரில் சென்று பார்வை யிட்ட பின்னர் ஊடகங்களிடம் பிருந்தா காரத் பேசினார். அவர்  மேலும் கூறுகையில், பேரிடர் நேரத்திலும் கூட, ஒன்றிய அரசு மாநி லத்தின் மீது அரசியல் பாகுபாடு காட்டுகிறது. தேசிய பேரிடர் நிவா ரண நிதியிலிருந்து ஒதுக்கீடுகளை வெளியிட்ட மாநிலங்களின் பட்டியல் கவலையளிப்பதாக உள்ளது. மகாராஷ்டிராவுக்கு 1492 கோடியும், ஆந்திராவுக்கு 716 கோடியும், பீகாருக்கு 655 கோடி யும், குஜராத்திற்கு 600 கோடியும், கேரளாவுக்கு 145.60 கோடியும் ஒதுக்கப்பட்டது.

முண்டக்கை பேரிடர் இழப்பை சமாளிக்க இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவை. நிவார ணப் பணிகளில் அரசியல் கலந்து கொடுமை காட்டப்படுகிறது என்றார் பிருந்தா.