districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி மேட்டுப்பட்டி கிராமங்களுக்கு பேருந்து வசதி

கரூர், நவ.1 - கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை அருகே உள்ள வடக்கு மேட்  டுப்பட்டி, நடுமேட்டுப்பட்டி, தெற்கு மேட்டுப்  பட்டி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக் கான குடும்பங்கள்  வசித்து வருகின்றன.  இந்த கிராமங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியணை அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வரு கின்றனர். மாணவ, மாணவிகள் காலையில் பள்ளிக்கு செல்வதற்கும், மாலையில் வீட் டிற்கு திரும்புவதற்கும் அரசுப் பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. இதனால் தினமும் 5 கி.மீட்டர் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்த னர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மேட்டுப்பட்டி கிளை சார்  பில், வடக்கு மேட்டுப்பட்டி, நடு மேட்டுப்பட்டி,  தெற்கு மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை வேளையில் அரசுப்  பேருந்தை இயக்க வேண்டும் எனக் கோரி  பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலு வலகம் மற்றும் அரசு அலுவலர்களிடம் பல முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல், மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்  பட்டு வந்தது.  இதனை கண்டித்தும் உடனடியாக அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடக்கு மேட்டுப்பட்டி கிளையின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என  அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டனர்.  தகவல் அறிந்து வந்த அரசு அலுவலர்கள், அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகரக் குழு உறுப்பினர் ராஜேந்திரன்,  கிளைச் செயலாளர் நவீன் சுகன்யா மற்றும் பொது மக்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் மினி பேருந்து மட்டும் வெள்ளி யணையில் இருந்து வந்து கொண்டிருந்தது. தங்கள் கிராமப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என வலி யுறுத்தி பல வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரி களுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள்  வழங்கப்பட்டுள்ளன. ஆனால் கோரிக்கை யின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இப்பகுதி கிராம மக்களும் மினி பேருந்து வருவதால் சமாளித்து வந்தனர். இந்நிலை யில் தீபாவளிக்கு 10 நாட்கள் முன்பு திடீரென அப்பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டது. இத னால் வடக்கு மேட்டுப்பட்டி, நடு மேட்டுப் பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்  கள் முற்றிலும் பேருந்து வசதி இல்லாத கிராமமாக மாறின.  பள்ளி செல்லும் சுமார் 70-க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை மாணவ-மாணவிகள் தினமும் 5 கி.மீட்டர் தொலைவிற்கு வெள்ளி யணைக்கு நடந்து சென்று வருகின்றனர். அப்படி வரும்போது தெருநாய்கள் தொல்லை, மது அருந்துபவர்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது எனக் கூறி அப்பகுதி கிராம மக்கள், பிள்ளைகளை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டனர்.  இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான பெற்றோர்கள், ‘பேருந்து வசதி ஏற்  படுத்தினால் மட்டுமே தங்களது குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவோம்’ என்றனர். இதனையறிந்த அரசு அதிகாரிகள், போக்குவரத்து அலுவலர்கள், நடு மேட்டுப்  பட்டிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர்.

அதில், திங்கள்கிழமை முதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதியளித்தனர்.  இதனால், திங்கட்கிழமை முதல் காலை  8.45 மணிக்கு நடுமேட்டுப்பட்டியில் இருந்து  வெள்ளியணைக்கும், மாலை 4.50 மணிக்கு  வெள்ளியணையில் இருந்து நடுமேட்டுப்பட்  டிக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. பெற்றோர் மகிழ்ச்சியுடன் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த னர்.  இப்பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார். மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலா ளர் எம்.ஜோதிபாசு, மாநகரச் செயலாளர் தண்டபாணி, திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரகுநாதன், மாநகரக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டுப்பட்டி கிளைச் செயலாளர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர். பேருந்துக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது. பின்  னர் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றனர்.