கரூர், டிச.21 - கரூர் வெண்ணெய்மலை பால சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டி ருந்த 18 கடைகளுக்கு சீல் வைத்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனர். கரூர் மாவட்டம், வெண் ணெய்மலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்த மான நிலம் சுமார் 520 ஏக்க ருக்கு மேல் இருப்பதாக கூறப்படு கிறது.
இந்த கோயில் (இனாம்) நிலத்தில் சுமார் 150 ஆண்டு களுக்கும் மேலாக பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்ப டைக்க வேண்டும் என கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கோயில் நிலங் களை மீட்க சென்ற அதிகாரிகளை சிறைபிடித்து வெண்ணெய்மலை பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால், அதிகாரிகள் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க முடியா மல் காலம் தாழ்த்தி வந்ததாலும், திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் எச்சரிக்கை இதனைத் தொடர்ந்து, நீதி மன்றம் கரூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அற நிலையத்துறை வசம் ஒப்படைத்து, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத் தில் சமர்ப்பிக்க வேண்டும், இல்லை யேல் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவை தொடர்ந்து, அதிரடியாக களம் இறங்கிய இந்து சமய அறநிலையத்துறை அதி காரி மற்றும் வருவாய் துறை அதி காரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி வெண்ணெய்மலை பாலசுப்ர மணிய சுவாமி கோயிலுக்கு சொந்த மான நிலங்களை காவல்துறை உதவியோடு மீட்கும் பணியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடைகளுக்கு சீல் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கு இடையே கடந்த மாதம் 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தும், கோயில் நிலங்களில் “இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம்; யாரும் பயன்படுத்தக் கூடாது” என எச்சரிக்கை பலகையும் வைத்தனர். முதற்கட்டமாக கோயில் பெய ரில் பட்டா உள்ள இடங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டு வருகின்றனர். இது தொ டர்பாக, 34 இடங்களை சீல் வைத்து காலி செய்ய கணக்கீடு செய்து உள்ள அதிகாரிகள், அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து கோயில் நிலங்களை மீட்டு வருகின்றனர். சனிக்கிழமை காலை வெண் ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த 18 கடைகளுக்கு இந்துசமய அற நிலையத்துறையின் உதவி ஆணை யர் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்பு டன் சீல் வைத்தனர்.
மேலும் கோயி லுக்கு சொந்தமான இடங்களை டிஜிட்டல் சர்வே செய்யும் பணியி லும் அறநிலையத்துறை அதிகாரி கள் ஈடுபட்டனர். 200 காவல்துறையினர் கடந்த மாதம் சீல் வைக்கும் பணி நடந்த போது பொதுமக்களுக் கும், காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை காலை கடைகளுக்கு சீல் வைக்கும் போது அதிகாரிகளுக்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிகாலையிலேயே இந்து சமய நிலையத் துறை அதிகாரிகள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கடை களுக்கு திடீரென சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.