கரூர், ஜன.10- நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து, ஒப்பந்த முறையை புகுத் தும் தமிழக அரசின் அரசாணை எண்.152-ஐ திரும்பப் பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி, சுய உதவிக்குழு ஒப்பந்த தொழி லாளர்கள் என பல்வேறு பெயர் களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர் கள், ஓட்டுநர்கள், குடிநீர் பணியா ளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், இரண்டு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யும் சட்ட விரோத போக்கினை கைவிட வேண்டும். புதன் மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் பகுதிநேர விடு முறை வழங்க வேண்டும். பண் டிகை நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண் டும். குறைந்தபட்ச ஊதிய அரசா ணைக்கு மாறாக ஊதியத்தை குறைக்கக் கூடாது. கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக ஊதிய உயர்வு வழங்காமல், ஒப்பந்த நீட் டிப்பு செய்திருப்பதை கைவிட்டு, நகராட்சி நிர்வாகமே நேரடியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக் கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாநகராட்சி அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்டப் பொருளாளர் ப.சரவணன், டாஸ்மாக் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, தையல் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ஹோச்சுமின், சிஐ டியு மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.கணேசன், ஆட்டோ சங்க தலைவர் என்.ரங்கராஜன், நக ராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அறிவழ கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பொன்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ் டின், பொருளாளர் பி.ரெங்கராஜ், மாவட்ட தலைவர் ரெங்கநாதன், துணைத்தலைவர் எம்.கருணாநிதி மற்றும் பி.கிருஷ்ணசாமி, துணை செயலாளர்கள் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றி னர்.