பெரம்பலூர், மார்ச் 14- பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய மருத்து வக் கல்லூரி அமைப்பதற்கு உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் செவ்வாயன்று பெரம்பலூர் வந்திருந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் புதிய பேருந்து நிறுத்தம், போட்டித்தேர்வு நுல கம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இவற் றின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷியாமளாதேவி பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி. ராஜேந்திரன், வேப்பூர் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு.கருணாநிதி, ராஜேந்திரன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ தமிழக முதல்வரின் அறிவுரை யைப் பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் சிந்தடிக் தளங்கள் அமைப்ப தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சி யர் ச.நிறைமதி, உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.