districts

கடும் போராட்டத்தையும் மீறி கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் மூடல்

கரூர், டிச.11 -  தனியார் கொரியர் நிறுவனங் களுக்கு ஆதரவாகவும், தனியார் முத லாளிகள் அதிக லாபம் ஈட்டிடும் வகை யிலும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தியா முழுவதும்  உள்ள 303 ஆர்எம்எஸ் அலுவல கங்களையும், இதில் தமிழகத்தில் கரூர், புதுக்கோட்டை, பரமக்குடி, கும்பகோணம், திண்டிவனம், அரக்கோணம், ஊட்டி, அரியலூர், திருவாரூர் ஆகிய 10 ஆர்எம்எஸ் அலுவலகங்களையும் கடந்த திங்கள்கிழமை முதல் மூடுவதற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து ஆர்எம்எஸ் அலுவலகங்களை மூடு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஆர்எம்எஸ் அலுவல கங்கள் முன்பும் அனைத்து கட்சி களின் சார்பில் கடுமையான போராட் டங்கள் நடைபெற்றன. இதைத் தொ டர்ந்து, திருவாரூர் ஆர்எம்எஸ் அலு வலகத்தை தவிர மற்ற 9 அலுவல கங்கள் திங்கள்கிழமை மாலை முதல் மூடப்பட்டன. 

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில், அனைத்து கட்சிகளும் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, கோரிக்கை மனு வழங்கினர். 

ஆனால் எந்தவித நடவடிக்கை யும் எடுக்காமல், மாலை 6.30 மணிக்கு  கரூர் ஆர்எம்எஸ் அலுவலகத்தில், அனைத்து தபால்களையும் திருச்சி ஆர்எம்எஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்வதற்கான பணி களை தபால்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மேற்கொண்டனர். கரூரில் இயங்கி வந்த ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடுவதற்கான பணி களையும் மேற்கொண்டனர். 

இதனையறிந்த அனைத்து கட்சியினர் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கூடி தபால்களை திருச்சிக்கு கொண்டு செல்லக் கூடாது, ஆர்எம்எஸ் அலுவலகம் கரூரில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

அப்போது கரூர் மாநகர  காவல்துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களை வலுக்கட்டாய மாக அப்புறப்படுத்தி, அனைத்து தபால்களையும் திருச்சிக்கு கொண்டு  சென்றனர். இது மட்டுமின்றி, கரூர் ஆர்எம்எஸ் அலுவலகத்தையும் மூடினர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, விசிக  சுடர்வளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சி களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

தொடர் போராட்டம் நடத்தப்படும்

சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் டெக்ஸ் டைல்ஸ் தொழில்கள், பஸ் பாடி தொழில்கள், டிஎன்பிஎல் காகித ஆலை, கரும்பாலைகள் என பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. பொருளாதாரத்தை ஈட்டுவதில் முக்கிய நகரமாக கரூர்  உள்ளது. பொதுமக்கள், வணிக நிறு வனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கரூர் ஆர்எம்எஸ் அலு வலகத்தால் பயனடைந்து வந்தனர்.  ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் மக்களுக்கு பய னளிக்க கூடிய அலுவலகங்களை தொடர்ந்து மூடுவது கண்டிக்கத் தக்கது. கரூரில் மீண்டும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை திறந்திடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றார்.