கரூர், டிச.9 - கரூர் ஆர்.எம்.எஸ் அலுவலகத்தை மூடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் கரூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சக்தி வேல், சி.முருகேசன், இரா.முத்துச்செல்வன், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்ட பாணி, சிபிஐ மாவட்டச் செயலாளர் நாட்ரா யன், காங்கிரஸ் ஸ்டிபன்பாபு, விசிக சுடர்வளவன், மதிமுக குணாளன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.